Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த நொடி தான்..! தோனியோட தீவிர ரசிகையாக நான் மாறிட்டேன்..! புகழ்ந்து தள்ளிய பாக். நடிகை

இஸ்லாமாபாத்: தல தோனியின் தீவிர ரசிகையாகிவிட்டேன் என்று அவரை புகழ்ந்து பாகிஸ்தான் நடிகை மதிரா முகமது பேசி இருக்கிறார்.

தோனிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த ரசிகர்களுக்கு வயது ஒரு தடையில்லை. திறமை, அர்ப்பணிப்பு, நிதானம் ஆகியவற்றால் தமது ரசிகர் பட்டாளத்தை கட்டி போட்டு வைத்திருப்பவர் தோனி.

அதற்கு லேட்டஸ்ட் உதாரணம்... பாகிஸ்தான் நடிகை மதிரா முகமது. தல தோனியை பற்றி ஆஹா, ஓஹோவென்று புகழ்ந்து தள்ளியிருக்கிறார். தோனியுடன் தமக்கு நிகழ்ந்த முதல் சந்திப்பு குறித்து பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

ஆசிய கோப்பை தொடர்

ஆசிய கோப்பை தொடர்

அவர் கூறியிருப்பதாவது: அது ஒரு ஆசிய கோப்பை சமயம். இந்தியா, பாகிஸ்தான் அணி வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் நானும் தங்கியிருந்தேன். எனக்கு பிடித்த பாகிஸ்தான் வீரரிடம் ஆட்டோகிராப் வாங்க நினைத்து அவரிடம் சென்றேன். ஆனால், அவர் என்னை கண்டு கொள்ளவே இல்லை.

சோகமாக இருந்தேன்

சோகமாக இருந்தேன்

அது என் மனதை மிகவும் பாதிக்க, சோகமுடன் காணப்பட்டேன். அப்போது தோனி என்னிடம் வந்து, என்னுடைய ஆட்டோகிராப் வேண்டுமா என்று கேட்டார். நானும் சந்தோஷமாக அவரிடம் இருந்து பெற்றுக் கொண்டேன்.

பேசிய தோனி

பேசிய தோனி

மேலும் அவர் தன் இருக்கைக்கு அருகில் எனக்கு இடம் கொடுத்து என்னிடம் பேசினார். அந்த ஒரு தருணத்தில் இருந்து நான் தோனியின் மிக தீவிர ரசிகையாக மாறி விட்டேன் என்று கூறியிருக்கிறார்.

ஆதரவு கரம்

ஆதரவு கரம்

தோனி மீது விமர்சனங்கள் எழும் நேரத்தில் எல்லாம், அவருடைய ரசிகர்கள் பட்டாளம் அவருக்கு ஆதரவாக இருக்கும். வழக்கமாக அது உள்ளூரில் நிகழும். இப்போது, நாடு கடந்து, பாகிஸ்தான் நடிகை ஒருவர் ஆதரவு கரம் எழுப்பி இருக்கிறார்.

Story first published: Tuesday, July 23, 2019, 15:08 [IST]
Other articles published on Jul 23, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+