30 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்த பாகிஸ்தான்.. 121 ரன்களில் சுருட்டியது இலங்கை.. சரிந்தது எப்படி?
துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் 121 ரன்களில் சுருண்டது.

இரண்டு அணிகளும் ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், இன்றைய ஆட்டம் சம்பிரதாய ஆட்டமாக நடந்தது.
அசலாங்காவுக்கு பதில் தனஞ்செய்யா டி சில்வா மற்றும் பெர்னான்டோவுக்கு பதில் பிரமோத் மதுசான் ஆகியோர் இலங்கை அணியிலும், நஷிம் ஷா, ஷதாப் கான் ஆகியோருக்கு ஓய்வு வழங்கி காதிர் மற்றும் ஹசன் அலி பாகிஸ்தான் அணியில் விளையாடுகிறார்கள்.
டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தனர். ரிஸ்வான் 14 ரன்களில் ஆட்டமிழக்க, பாபர் அசாம் 29 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தார். இதனையடுத்து ஃபக்கர் ஷமான், இஃப்திகார் அகமது ஆகியோர் தலா 13 ரன்களை சேர்த்தனர்.
பாகிஸ்தான் அணி 91 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து விளையாடி கொண்டிருந்த நிலையில், அதன் பிறகு இலங்கை வீரர்களின் சூழலில் சிக்கி பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தனஞ்செய்யா டி சில்வாவில் வீசிய ஒரே ஓவரில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தனர். இதே போன்று சிஎஸ்கே வீரர் தீக்சனா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பாகிஸ்தான் அணி மேலும் 30 ரன்கள் சேர்ப்பதற்குள் அடுத்த 6 விக்கெட்டுகளை இழந்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 121 ரன்களுக்கு சுருண்டது. ஷதாப் கான் இல்லாததால் பாகிஸ்தான் நடுவரிசை சுற்றிலும் பலம் இல்லாமல் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications