உலக கோப்பை டி20: அப்ரிடி தலைமையில் அணி வீரர்களை அறிவித்தது பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்: 6வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் மார்ச் 8ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெற உள்ளது.
உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல அணிகள் தங்கள் அணி சார்பில் கலந்து கொள்ளும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இலங்கை, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, பாகிஸ்தான் போன்ற நாடுகள் அறிவிக்காமல் இருந்தன.

இந்நிலையில், இன்று உலக கோப்பை மற்றும் ஆசிய கோப்பை போட்டிகளில் பங்கேற்கும் அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஓப்பனிங் பேட்ஸ்மேன், அகமது ஷெஷாத் மற்றும் அனுபவம்மிக்க வேகப்பந்து வீச்சாளர் உமர் குல் ஆகியோருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.
ஆல்-ரவுண்டர் ஷாகித் அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் பட்டியல் வருமாறு: ஷாகித் அப்ரிடி (கேப்டன்), குர்ரம் மன்சூர், முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், உமர் அக்மல், சர்பராஸ் அகமது, பாபர் அஜாம், இப்திகார் அகமது, எமாட் வாசிம், அன்வர் அலி, முகமது இர்பான், வகாப் ரியாஸ், முகமது அமீர், முகமது நவாஸ், ரும்மன் ரயீஸ்.


Click it and Unblock the Notifications