Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலக கோப்பை - பாகிஸ்தான் மிரட்டலான அணி அறிவிப்பு.. அனுபவ வீரருக்கு வாய்ப்பு இல்லை

லாகூர்: 2022ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பாபர் அசாம் தலைமையில் 15 பேர் கொண்ட வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

பாகிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை 2009ஆம் ஆண்டு வென்றது. அதன் பிறகு 2007, 2010, 2012 மற்றும் 2021ஆம் ஆண்டு என 4 அரையிறுதி வரை பாகிஸ்தான் முன்னேறி உள்ளது.

இதனால் இம்முறை கோப்பையை கைப்பற்றியே ஆக வேண்டும் என்பதற்காக மேத்தீவ் ஹைடன் மற்றும் பிளான்டர் ஆகியோரை ஆலோசகராக பொறுப்பில் அமைத்துள்ளது.

மாற்றங்கள்

மாற்றங்கள்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. இதனால் பேட்டிங்கை வலுப்படுத்தும் விதமாக பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சின் பலமும் பல மடங்கு அதிகரித்துள்ளது. தற்போது அணியின் விபரத்தை காணலாம். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷான் மசூத் டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஷாகின் ஷா ஆப்ரிடி

ஷாகின் ஷா ஆப்ரிடி

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சோயிப் மாலிக் டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பெறவில்லை. மேலும் ஃபக்கர் ஷமான் அதிரடியாக நீக்கப்பட்டு, ரிசர்வ் வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார். வேகப்பந்துவீச்சை பொறுத்தவரை அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள ஷாகின் ஷா ஆப்ரிடி டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பிடித்துள்ளார். ஷாகின் ஷா ஆப்ரிடி அடுத்த மாதம் முதல் பயிற்சியை தொடங்க உள்ளதாக பாக். கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

வேகப்பந்துவீச்சாளர்கள்

வேகப்பந்துவீச்சாளர்கள்

இதே போன்று வேகப்பந்துவீச்சாளர் முகமது வசீம் ஜூனியர், நஷிம் ஷா ஆகியோர் டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பிடித்துள்ளனர். ஆசிய கோப்பையில் இடம்பெற்ற முகமது ஹாரிஸ், ஷாநவாஸ் தாஹானி ஆகியோர் ரிசர்வ் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதே உலகக் கோப்பை அணி நியூசிலாந்தில் வரும் 7ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ள முத்தரப்பு டி20 தொடரில் பங்குபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து தொடர்

இங்கிலாந்து தொடர்

வரும் 20ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான 7 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், இதே அணியே பங்கு பெற உள்ளது. ஆனால் ஃபக்கர் ஷமான், ஷாகின் ஷா ஆப்ரிடிக்கு பதிலாக அறிமுக வீரர்களான ஆல்ரவுண்டர் ஆமிர் ஜமாலும், சுழற்பந்துவீச்சாளர் அப்ரர் அகமதும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அணி தேர்வு குறித்து பேசிய தேர்வுக்குழுத் தலைவர் முகமது வசீம், பாகிஸ்தான் அணி கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து 13 போட்டியில் விளையாடி 9 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இம்முறையும் டி20 உலகக் கோப்பை தொடரில் பாக். வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

உலககோப்பை பாக். அணி விவரம்

உலககோப்பை பாக். அணி விவரம்

பாபர் அசாம் ( கேப்டன்), ஷதாப் கான் ( துணை கேப்டன்), ஆசிஃப் அலி , ஹைதர் அலி, ஹரிஸ் ரவுஃப், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது ஹஸ்னாயின், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வசீம் ஜூனியர், நஷிம் ஷா, ஷாயின் ஷா ஆஃப்ரிடி, ஷான் மசூத், உஸ்மான் காதிர்

ரிசர்வ் வீரர்கள் - ஃபக்கர் ஷமான், முகமது ஹாரிஸ், ஷாநவாஸ் தஹானி

Story first published: Thursday, September 15, 2022, 19:23 [IST]
Other articles published on Sep 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+