Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன நினைச்சிட்டிருக்கு இந்தியா… ? ராணுவ தொப்பியோட எப்படி விளையாடலாம்.. வம்பிழுக்கும் பாக்.

இஸ்லாமாபாத்: ராணுவ தொப்பி அணிந்து விளையாடிய இந்திய வீரர்கள் மீது ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் காட்டமாக கூறியிருக்கிறது.

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் பலியான 40 சிஆர்பிஎப் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியினர் ராணுவ வீரர்கள் அணியும் தொப்பி அணிந்து விளையாடினார். ஆட்டத்தில் கிடைக்கும் ஊதியத்தை வீரர்களின் குடும்பத்துக்கு வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தனர்.

ஆனால், ராணுவ தொப்பி அணிந்து நமது வீரர்கள் விளையாடியதை பாகிஸ்தான் அமைச்சர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இந்திய அணி மீது ஐசிசி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கொந்தளித்துள்ளனர்.

பாக். அமைச்சர்

பாக். அமைச்சர்

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சசரான ஷா முகமது குரோஷி ஒருபடி மேலே போய், கடுமையாக பொங்கி இருக்கிறார்.அவர் கூறியிருப்பதாவது:

உலகமே பார்த்தது

உலகமே பார்த்தது

இந்திய கிரிக்கெட் தங்களின் அணிக்குரிய தொப்பியை அணிந்து விளையாடுவதற்கு பதிலாக இந்திய ராணுவத்தின் தொப்பி அணிந்து விளையாடியதை இந்த உலகமே பார்த்தது. இது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு தெரியாதா? பார்க்கவில்லையா..?

ஐசிசி பொறுப்பு

ஐசிசி பொறுப்பு

இந்த விஷயத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் அளிக்கும் முன், ஐசிசி கவனிக்க வேண்டும். இந்திய அணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அது ஐசிசியின் பொறுப்பாகும் என்று தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் கருத்து

பாகிஸ்தானின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பவாத் சவுத்ரி தமது ட்வி்ட்டரில் கூறியிருப்பதாவது:

இந்திய அணியின் செயல் சாதாரணமானது அல்ல. கிரிக்கெட் தானே என்று இந்த விவகாரத்தை அப்படியே விட்டுவிட முடியாது.

 கறுப்பு பட்டை அணிவோம்

கறுப்பு பட்டை அணிவோம்

இவற்றை இந்திய அணி நிறுத்திக்கொள்ளாவிட்டால், உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி கையில் கறுப்பு பட்டை அணிந்து விளையாட வேண்டும். காஷ்மீரில் இந்திய ராணுவம் செய்யும் அட்டூழியத்தை கண்டித்தும், உலகின் பார்வையை திருப்பும் வகையிலும் இதுபோன்று விளையாட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

Story first published: Saturday, March 9, 2019, 17:03 [IST]
Other articles published on Mar 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+