Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யார்க்கர் மேல் யார்க்கர் போட்டு பாகிஸ்தான் பயிற்சியாளரை கவர்ந்த பும்ரா

துபாய் : பாகிஸ்தான் அணி இந்திய அணிக்கு எதிரான சூப்பர் 4 சுற்றில் தோல்வி அடைந்து மனமுடைந்து போய் உள்ளதாக கூறி இருக்கிறார் அணி பயிற்சியாளர் மிக்கி ஆர்தர்.

ஆசிய கோப்பை தொடரில் இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. நாளை ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஆட உள்ளது.

பாகிஸ்தான் அணியோ, நாளை நடைபெறும் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் வென்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும்.

தோல்வி பயத்தில் பாகிஸ்தான்

தோல்வி பயத்தில் பாகிஸ்தான்

இந்திய அணிக்கு எதிராக இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்தது அந்த அணிக்கு நம்பிக்கையின்மையை கொடுத்துள்ளதாக கூறுகிறார் மிக்கி ஆர்தர். எங்கே தோற்று விடுவோமோ என்ற பயம் அவர்களிடம் இருப்பதாக கூறினார் அவர்.

கோட்டை விட்ட கேட்ச்கள்

கோட்டை விட்ட கேட்ச்கள்

"இந்திய அணிக்கு எதிராக ஒரு இன்ச் கொடுத்தாலும் அவர்கள் அதை பிடித்துக் கொள்வார்கள். அதுதான் நேற்று நடந்தது" என பாகிஸ்தான் அணி கோட்டை விட்ட கேட்ச்கள் பற்றி குறிப்பிட்டார் பயிற்சியாளர் ஆர்தர்.

கவர்ந்த பும்ரா

கவர்ந்த பும்ரா

அது போல, இந்திய அணியின் பும்ரா வலைப் பயிற்சியில் யார்க்கர் மேல் யார்க்கர் போட்டு பயிற்சி செய்தது தன்னை வெகுவாக கவர்ந்தது என குறிப்பிட்டார். நேற்று பும்ரா பந்தில் ரன் குவிக்க பாகிஸ்தான் அணி கடுமையாக தடுமாறியது.

அரையிறுதி போன்ற போட்டி

அரையிறுதி போன்ற போட்டி

அடுத்த போட்டி ஒரு அரையிறுதி போல மாறியுள்ளது. எனவே பாகிஸ்தான் எப்படியாவது ஒரு வழியை கண்டுபிடித்து வென்றே ஆகா வேண்டும் என கூறினார் மிக்கி ஆர்தர்.

Story first published: Monday, September 24, 2018, 18:19 [IST]
Other articles published on Sep 24, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+