Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாகிஸ்தான் பேட்ஸ்மேன் ஹைதர் அலி இங்கிலாந்தில் கைது.. பாலியல் வழக்கால் சஸ்பென்ட் செய்த பிசிபி

மான்செஸ்டர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஹைதர் அலி, இங்கிலாந்தின் மான்செஸ்டர் காவல்துறையினரால் குற்றவியல் (கிரிமினல்) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்தச் செய்தியை உறுதி செய்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB), அவரை உடனடியாக இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் என்ற பாகிஸ்தான் உள்நாட்டு அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. இந்த பயணத்தின் போது நடந்த ஒரு சம்பவத்தின் அடிப்படையிலேயே இந்த விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

Pakistan Batsman Haider Ali Suspended by PCB Amid Criminal Investigation in England

இருப்பினும், ஹைதர் அலி மீதான குற்றச்சாட்டு என்ன என்பது குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. ஊடகங்களில் வெளியாகி இருக்கும் செய்தியை வைத்து பார்க்கையில் அவர் பாகிஸ்தான் வம்சாவளி பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு இருப்பதாக விசாரணை நடந்து வருகிறது.

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கிரிக்கெட் வீரர் ஹைதர் அலி சம்பந்தப்பட்ட ஒரு குற்றவியல் விசாரணை மான்செஸ்டர் காவல்துறையால் நடத்தப்படுவது குறித்து எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் சட்ட நடைமுறைகளை நாங்கள் முழுமையாக மதிக்கிறோம். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும். விசாரணை முடியும் வரை ஹைதர் அலி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைதர் அலி தற்போது கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டு இருக்கிறார். அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டு இருக்கிறது. அவர் இங்கிலாந்தில் காவலில் இல்லை என்றாலும், அவரிடம் மான்செஸ்டர் காவல்துறையினர் எச்சரிக்கையுடன் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், விசாரணை முடியும் வரை அவர் பயணக்கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும், அதாவது இங்கிலாந்து நாட்டை விட்டு வெளியேற முடியாது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

24 வயதான ஹைதர் அலி, பாகிஸ்தான் அணிக்காக 2 ஒருநாள் போட்டிகளிலும், 35 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் அணியில் அவர் ஒரு முக்கிய மூத்த வீரராக இடம்பெற்றிருந்தார். அந்தத் தொடரின் முதல் போட்டியில் 71 ரன்களும், மூன்றாவது போட்டியில் ஆட்டமிழக்காமல் 55 ரன்களும் எடுத்திருந்தார்.

இந்தச் சம்பவம் பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையின் முடிவிலேயே ஹைதர் அலியின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து தெரியவரும்.

Story first published: Friday, August 8, 2025, 6:45 [IST]
Other articles published on Aug 8, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+