Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சவுத் ஆப்பிரிக்காவில் சூனியம் வைச்சுட்டாங்க.. பாக். வீரர் சொன்ன பகீர் காரணம்.. என்ன தான் நடக்குது?

கேப் டவுன் : பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன் ஹாரிஸ் சொஹைல் தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரில் பங்கேற்றார். முதல் டெஸ்ட் முடிந்தவுடன் காயம் காரணமாக அவர் பாகிஸ்தான் அனுப்பி வைக்கப்பட்டார்.

ஆனால், அதன் பின்னணியில் வேறு சில காரணங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. கிரிக்கெட் உலகில் இதுவரை கேள்விப்படாத வகையில் தனக்கு சூனியம் வைக்கப்பட்டுள்ளதாக ஹாரிஸ் கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

காயம் ஏன்?

காயம் ஏன்?

முதல் டெஸ்ட் போட்டிக்கு பின் ஹாரிஸுக்கு முட்டியில் காயம் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், ஹாரிஸ் தான் சூனியத்தால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அதனால் தான் காயம் ஏற்பட்டது என்றும் கூறியுள்ளார். அதனால் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ஹாரிஸ் வீட்டில் இருக்கிறார்

ஹாரிஸ் வீட்டில் இருக்கிறார்

பாகிஸ்தானில் ஹாரிஸ் காயத்தை குணமாக்க கிரிக்கெட் முகாமுக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் அங்கேயும் செல்லவில்லை. அவர் தற்போது தன் வீட்டில் இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

கிரிக்கெட் முகாமுக்கு செல்ல மறுப்பு

கிரிக்கெட் முகாமுக்கு செல்ல மறுப்பு

கிரிக்கெட் முகாமுக்கு செல்ல மறுத்த போதும் அவர் சூனியம் வைத்துள்ளதாக கூறி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார் என கூறப்படுகிறது. பாகிஸ்தான் அணி உலகக்கோப்பைக்கு தயாராகி வரும் நிலையில், தொடர்ந்து அணியில் இடம் பெற்று வரும் கிரிக்கெட் வீரர் பில்லி, சூனியம் என கூறி வருவது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

என்ன தான் நடக்கிறது?

என்ன தான் நடக்கிறது?

பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்து தொடரையும் இழந்துள்ளது. மேலும், அந்த அணிக்குள் கேப்டன் மற்றும் பந்துவீச்சாளர்கள் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக வேறு செய்திகள் வந்துள்ளது. அதோடு ஹாரிஸ் பற்றிய தகவலும் சேர, பாகிஸ்தான் அணியில் என்ன தான் நடக்கிறது என கேட்க வைத்துள்ளது.

2015இல் நடந்த சம்பவம்

2015இல் நடந்த சம்பவம்

கிரிக்கெட் வீரர்கள் இப்படி கூட நடந்து கொள்வார்களா? என ஆச்சரியப்பட்டால், ஏற்கனவே ஹாரிஸ் சொஹைல் 2015 நியூசிலாந்து தொடரில் இதே பில்லி, சூனியம் போன்ற காரணங்களை கூறி தான் தங்கி இருந்த அறையை மாற்றுமாறு கூறி இருக்கிறார்.

மனதளவில் அழுத்தம்

மனதளவில் அழுத்தம்

பாகிஸ்தான் கிரிக்கெட் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஹாரிஸ் பற்றி காயம் என்ற தகவல் மட்டுமே கூறப்படுகிறது. எனினும், ஹாரிஸ் மனதளவில் அழுத்தத்தில் இருப்பதாக மட்டும் சிலர் கூறியுள்ளார்கள்.

உலகக்கோப்பையில் பின்னடைவு

உலகக்கோப்பையில் பின்னடைவு

பாகிஸ்தான் அணி மற்ற அணிகளை போல உலகக்கோப்பைக்கு முழு வீச்சில் தயாராகி வருகிறது. வெற்றி தோல்விகளை மாறி மாறி சந்தித்தாலும், பாகிஸ்தான் அணியில் இளம் வீரர்கள் வளர்ந்து வருவது அந்த அணிக்கு சாதகமான அம்சமாக உள்ளது. அதில் ஒரு முக்கிய வீரரான ஹாரிஸ் மன அழுத்தத்தில் இருப்பது அந்த அணிக்கு இழப்பு தான்.

Story first published: Thursday, January 10, 2019, 11:17 [IST]
Other articles published on Jan 10, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+