Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கத்துகிடனும்.. இந்தியாகிட்ட இருந்து இந்த விஷயத்த கத்துகிடனும்: பாக். முன்னாள் கேப்டன் டிப்ஸ்

இஸ்லாமாபாத்: இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று பாகிஸ்தானுக்கு எஞ்சியுள்ளது என்று கூறியுள்ளார் அந்த நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆசிப் இக்பால்.

பாகிஸ்தான் இதுவரை ஆடிய 6 லீக் ஆட்டங்களில் ஒரு போட்டியில் மட்டுமே 300 ரன்களை கடந்துள்ளது. 400 ரன்களே சாதாரணமாகிவிட்ட இந்த சூழலில், பாகிஸ்தான் எடுத்த அந்த ரன்களும் கூட , குட்டி அணியான ஐக்கிய அரபு எமிரேட்ஸ்சுக்கு எதிராக கிடைத்ததுதான்.

பேட்டிங் வீக்

பேட்டிங் வீக்

இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஆசிப் இக்பால் கூறியுள்ளதாவது: மனசாட்சிப் படி சொல்ல வேண்டுமானால், பிற அணிகளை ஒப்பிட்டால் பாகிஸ்தானின் பேட்டிங் வீக்காக உள்ளது.

ஆக்ரோஷமே இல்லையே

ஆக்ரோஷமே இல்லையே

பிற அணிகள் எப்போதுமே 300க்கு மேல் ரன்களை குவிக்கும் உத்வேகத்துடனேயே களத்திற்கு வருகின்றன. அவ்வப்போது, ரன் குவிப்பும் நடந்துள்ளது. எதிர் தரப்பு பவுலிங்கை ஆக்ரோஷமாக எதிர்கொள்கின்றனர் பிற அணி வீரர்கள். அது பாக். வீரர்களிடம் மிஸ்சிங்.

இந்தியா பேட்டிங்கை பாருங்கள்

இந்தியா பேட்டிங்கை பாருங்கள்

இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து போன்ற நாட்டு வீரர்களின் பேட்டிங்கை பாருங்கள். எவ்வளவு ஆக்ரோஷம் தெரிகிறது.

ரன் குவிக்க தடுமாற்றம்

ரன் குவிக்க தடுமாற்றம்

பாகிஸ்தான் அணி அதிக ரன்களை குவிக்க தடுமாறிவர ஒரு காரணம், அணி பேட்ஸ்மேன்களிடம் ஆக்ரோஷம் இல்லாததுதான். மார்டன் டே கிரிக்கெட்டுக்கு தேவையான ஆக்ரோஷ ஆட்டத்தை எந்த ஒரு போட்டியிலுமே பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் வெளிப்படுத்தவில்லை (ஒருவேளை ஐபிஎல் தொடரில் ஆட முடியாதது ஒரு காரணமோ).

கம்பீரம் வேண்டும்

கம்பீரம் வேண்டும்

பேட்டிங்கில் ஆக்ரோஷமாக செயல்படுவது என்பதற்கான அர்த்தம், பவுலரை பார்த்து திட்டுவது கிடையாது. மாறாக, வீரர்களின் பாடி லேங்குவேஜில் அந்த, ஆக்ரோஷம் தென்பட வேண்டும். வீரர்களிடம் கம்பீரம் காணப்பட வேண்டும். ஆனால் இதுவரை பாகிஸ்தான் வீரர்களின் உடலில் அது காணப்படவில்லை. சோர்ந்து போய் திரிகின்றனர்.

கொஞ்சம் தேவலை

கொஞ்சம் தேவலை

விக்கெட் கீப்பர் சர்பாஸ் அகமதுவின் வருகை, ஓப்பனிங்கை பலமாக்கியுள்ளது. அவர் சிறப்பான தொடக்கத்தை அளித்தால்தான், பாகிஸ்தான் அணியால் அடித்து ஆட முடியும். இவ்வாறு ஆசிப் இக்பால் கூறினார்.

Story first published: Tuesday, March 17, 2015, 10:29 [IST]
Other articles published on Mar 17, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+