Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வேற பேட்ஸ்மேனே இல்லையா ? பாகிஸ்தானை மீண்டும் காப்பாற்றிய முகமது ரிஸ்வான்.. வங்கதேசம் தோல்வி..

கிறிஸ்ட்சர்ச் : டி20 உலககோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் பாகிஸ்தான் அணி , நியூசிலாந்துக்கு சென்று அங்கு முத்தரப்பு டி20 தொடரில் தயாராகிறது.

இதில் , முதல் டி20 ஆட்டத்தில் வங்கதசமும், பாகிஸ்தானும் மோதியது. டாஸ் வென்ற வங்கதேசம்

அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து தொடக்க வீரராக முகமது ரிஸ்வானும், பாபர் அசாமும் வழக்கம் போல் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

சொற்ப ரன்கள்

சொற்ப ரன்கள்

பாபர் அசாம் 25 பந்துகளை எதிர்கொண்டு 22 ரன்களை மட்டுமே அடித்தார். இதனை தொடர்ந்து ஷான் மசூத், முகமது ரிஸ்வான் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனை தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் நடுவரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ரிஸ்வான் அபாரம்

ரிஸ்வான் அபாரம்

ஹைதர் அலி 6 ரன்களிலும், இஃப்திகார் 13 ரன்களிலும், ஆசிஃப் அலி 4 ரன்களிலும் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். ஒரு முனையில் விக்கெட் விழுந்தாலும், மறுமுனையில் நங்கூரம் போட்டு நின்ற முகமது ரிஸ்வான் 50 பந்துகளை எதிர்கொண்டு 78 ரன்கள் சேர்த்தார். இதில் 7 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். இதனால் 20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்துள்ளது.

முக்கிய விக்கெட்

முக்கிய விக்கெட்

168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியின் மெஹதி ஹசன் 10 ரன்களிலும், சபிர் ரஹ்மான் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். லிதான் டாஸ் ஒரு அளவிற்கு நிலைத்து நின்று 26 பந்துகளுக்கு 35 ரன்கள் எடுத்தார். அவருக்கு ஆதிஃப் ஹூசைன் 25 ரன்கள் எடுத்து கம்பெனி கொடுக்க, முக்கிய கட்டத்தில் இருவரும் ஆட்டமிழந்தனர்.

வங்கதேசம் தோல்வி

வங்கதேசம் தோல்வி

மொசாடேக் ஹூசையின் டக் அவுட்டாகியும், நுரல் ஹூசைன் 8 ரன்களிலும் வெளியேறினர். அப்போது யாசிர் அலி அதிரடியாக விளையாடி 21 பந்துகளை எதிர்கொண்டு 42 ரன்களை விளாசினார். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்பு கூடியது. எனினும் மற்றவர்கள் யாரும் துணை நிற்காததால் வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்துள்ளது.

Story first published: Friday, October 7, 2022, 12:42 [IST]
Other articles published on Oct 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+