Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2021ன் மாஸ் மேட்ச்.. அதிவேக டி20 சதம் அடித்தும் இங்கி., தோல்வி.. பாகிஸ்தான் நம்பமுடியாத ஆட்டம்

நாட்டிங்கம்: இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டியில், பாகிஸ்தான் நம்ப முடியாத வெற்றியை பதிவு செய்திருக்கிறது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பாபர் அஸம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, ஒருநாள் தொடரில் ஒயிட் வாஷ் ஆனது.

இதனால், அந்த அணி மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் குவிந்தன. நீங்கள் எதற்கும் லாயக்கில்லை என்ற அளவுக்கு சீனியர் வீரர்களின் விமர்சனம் இருந்தது.

 வெளுத்துவிட்ட ஓப்பனர்ஸ்

வெளுத்துவிட்ட ஓப்பனர்ஸ்

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில், அட்டகாசமாக விளையாடியுள்ளது பாகிஸ்தான். விளையாடியது மட்டுமின்றி முதல் வெற்றியையும் பதிவு செய்திருக்கிறது. நாட்டிங்கமில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து, ஃபீலடிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக ரிஸ்வான், பாபர் அஸம் களமிறங்கினர். இதில், ரிஸ்வான் 63 ரங்களும், கேப்டன் பாபர் 49 பந்துகளில் 85 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர்.

 அதிவேக சதம்

அதிவேக சதம்

இதனால் அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்களை குவித்தது. கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய அணியில், லிவிங்ஸ்டோன் மட்டும் தாக்குப்பிடிக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால், அந்த அணி 19.2 ஓவரில் 201 ரன்கள் மட்டும் எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. லிவிங்ஸ்டோன் 43 பந்துகளில் 103 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவர் 42 பந்துகளில் சதம் அடித்திருந்தார். இதன் மூலம், டி20 போட்டிகளில் இங்கிலாந்து சார்பில் அதிவேகமாக சதம் அடித்த வீரர் எனும் பெருமையை அவர் பெற்றார்.

 டி20 போட்டிகள் மட்டும்

டி20 போட்டிகள் மட்டும்

இருந்தாலும், அந்த அணியால் வெற்றிப் பெற முடியவில்லை. இந்த இங்கிலாந்து தொடரில், பாகிஸ்தான் அணியின் முதல வெற்றி இதுவேயாகும். கடும் விமர்சனங்களை சந்தித்து வந்த அணி, இப்போது ஆங்கில மண்ணில் வெற்றியை ருசித்திருக்கிறது. இதனால், ரசிகர்கள் பலரும், பாகிஸ்தான் டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் ஆடுவதை நிறுத்திவிட்டு, டி20 போட்டியில் மட்டும் விளையாடலாம் என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

Recommended Video

England beat Pakistan and level the series | ENG vs PAK 2nd T20 | OneIndia Tamil
 1-0 என முன்னிலை

1-0 என முன்னிலை

இத்தனைக்கும் இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோ, ஜேசன் ராய், டேவிட் மலன், மோர்கன் என்று டாப் கிளாஸ் வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். அப்படியிருந்தும் அந்த அணி பாகிஸ்தானிடம் தோற்றுவிட்டது. பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அப்ரிடி, ஷதாப் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், பாகிஸ்தான் 1 - 0 என்று முன்னிலை வகிக்கிறது.

Story first published: Saturday, July 17, 2021, 14:14 [IST]
Other articles published on Jul 17, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+