டி20 உலக கோப்பை: 'வார்ம் - அப்' போட்டியில் இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி
கொல்கத்தா: உலக கோப்பை டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி20 உலகக் கோப்பை போட்டிகளுக்கு முன்னதாக மும்பையில் உள்ள கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதிய வார்ம் அப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஷர்ஜில் கான் (23), அமகமது ஷோசாத் (18), சர்பராஸ் அகமது (13, உமர் அக்மல் (19) என சொற்ப ரன்னில் அவுட் ஆகி வெளியேறினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் அப்ரிதி டக் அவுட் ஆனார்.
நிலைத்து ஆடிய முகமது ஹபீஸ் அதிகபட்சமாக 49 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார். 20 ஓவர்களையும் முழுமையாக விளையாடிய அந்த அணி 5 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் மட்டும் எடுத்தது. இலங்கை தரப்பில் பெரேரா 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இறங்கிய இலங்கை அணி 9 விக்கெட்களை இழந்து 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பாகிஸ்தான் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. திரிமன்னே மட்டும் அதிகப்பட்சமாக 45 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் சார்பில் இமாத் வாசிம் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.


Click it and Unblock the Notifications