For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"அந்த சிக்ஸ் ஒரு கிளாசிக்" விராட் கோலியால் மட்டுமே முடியும்.. பாக். வீரர் ஹாரிஸ் ராஃப் பாராட்டு!

கராச்சி: விராட் கோலியை தவிர வேறு எந்த வீரராலும் எனது பந்துவீச்சில் கிளாசிக்கான சிக்சரை அடிக்க முடியாது என்று பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஹாரிஸ் ராஃப் பாராட்டியுள்ளார்.

சரசாரி பேட்ஸ்மேனுக்கு சமகாலத்தின் அசாதாரண பேட்ஸ்மேனுக்குமான வித்தியாசம் என்ன என்பதை பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை போட்டியின் போது விராட் கோலி காட்டினார்.

8 பந்துகளில் 28 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில், விராட் கோலி நேராக அடித்த அந்த முதல் சிக்ஸ் உலகின் அனைத்து ஜாம்பவான் வீரர்களாலும் பாராட்டப்பட்டது. அதிலும் பாகிஸ்தான் அணியில் மிக அதிக வேகத்தில் வீசக் கூடிய ஹாரிஸ் ராஃப் பந்தில் விராட் கோலி சிக்சர் அடித்து மிரட்டினார்.

விராட் கோலியின் சிக்ஸ்

விராட் கோலியின் சிக்ஸ்

விராட் கோலியின் அந்த சிக்சரை பார்த்து எதிர்முனையில் நின்றிருந்த ஹர்திக் பாண்டியாவோடு சேர்ந்து பதற்றத்தோடு பார்த்து கொண்டிருந்த அனைத்து ரசிகர்கள் மெய் மறந்தனர். வெற்றியா, தோல்வியா என்ற பதற்றத்தில் இருக்கும் ரசிகனை மெய் மறக்கச் செய்வது எளிதான விஷயமல்ல. விராட் கோலி அடித்த அந்த சிக்சர் கிரிக்கெட் வரலாற்றின் எல்லா காலத்திலும் மிகச் சிறந்த ஷாட் என்று ஐசிசி பாராட்டு தெரிவித்தது.

ஹாரிஸ் ராஃப் பேட்டி

ஹாரிஸ் ராஃப் பேட்டி

இந்த நிலையில் விராட் கோலி அடித்த சிக்சர் பற்றி பந்துவீசிய பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஹாரிஸ் ராஃப் பேசி உள்ளார். இதுகுறித்து ஹாரிஸ் ராஃப் கூறுகையில், டி20 உலகக்கோப்பைத் தொடரில் விராட் கோலியின் ஆட்டம் கிளாசிக்காக இருந்தது. எனது பந்துவீச்சில் விராட் கோலியை தவிர வேறு எந்த வீரராலும், அப்படி ஒரு சிக்சரை அடிக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை.

திட்டம் இதுதான்

திட்டம் இதுதான்

ஹர்திக் பாண்டியா அல்லது தினேஷ் கார்த்திக் அப்படி ஒரு சிக்சர் அடித்திருந்தால், நிச்சயம் மனதளவில் சோகமாக இருந்திருப்பேன். ஆனால் விராட் கோலியின் பேட்டில் இருந்து வந்தது மொத்தமாக க்ளாஸ் ரகம். சரியாக நான் பந்துவீசுவதற்கு முன்னதாக 12 பந்துகளில் 31 ரன்கள் இந்திய அணி எடுக்க வேண்டும். அப்போது நான் வீசிய 4 பந்தில் 3 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தேன். கடைசி ஓவரை சுழற்பந்துவீச்சாளரான நவாஸ் வீசப் போகிறார் என்பதை அறிந்ததால், அவருக்கு 20 ரன்களாவது கொடுக்க வேண்டும் என்பதே திட்டம்.

கிளாசிக் ஷாட்

கிளாசிக் ஷாட்

நான் முதலில் வீசிய ஸ்லோயர் பந்துகளில் ரன்கள் குவிக்கவில்லை. வேகமாக வீசிய பந்தில் மட்டுமே பவுண்டரி அடிக்கப்பட்டது. அதனால் ஸ்லோயர் பந்து வீசுவதே எனது திட்டமாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் ஸ்கொயர் பவுண்டரி திசை கூடுதலாக இருந்ததும் ஒரு காரணம். அதனால் நான் வீசிய பந்தை என் தலைக்கு மேல் நேராக அடிப்பார் என்று கற்பனை கூட செய்து பார்க்கவில்லை. ஆனால் விராட் கோலி அடித்தது முழுக்க முழுக்க கிளாசிக் ஷாட் என்று பாராட்டி உள்ளார்.

Story first published: Wednesday, November 30, 2022, 23:53 [IST]
Other articles published on Nov 30, 2022
English summary
Pakistan fast bowler Harris Raff has praised that no other player except Virat Kohli can hit the classic six in my bowling
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+