யாருப்பா நீ, இவ்வளவு நாளா எங்க இருந்த?.. ஷேன் வார்னேவை விஞ்சிய சூப்பர் ஸ்பின்னர் யாசிர் ஷா
லண்டன்: உலக கிரிக்கெட் அரங்கில் பேட்ஸ்மேன்கள் வயிற்றில் புளியை கரைக்கும் ஸ்பின்னராக வளர்ந்து வருகிறார் பாகிஸ்தானின் யாசிர் ஷா.
4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது பாகிஸ்தான் அணி. முதல் டெஸ்ட் போட்டி, புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
முதலில் பேட் செய்தது பாக். 2வது இன்னிங்ஸ் முடிவில் இங்கிலாந்து அணி வெற்றிக்கு 282 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது பாகிஸ்தான். ஆனால் பாகிஸ்தான் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத இங்கிலாந்து அணி 207 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால் 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பாகிஸ்தான்.
பாகிஸ்தானின் ஸ்டார் ஸ்பின்னராக உருவெடுத்துள்ள லெக்-ஸ்பின்னர் யாசிர் ஷா முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளையும், 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, பாகிஸ்தான் வெற்றிக்கு பக்க பலமாக இருந்தார். அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

10 விக்கெட்டுகள்
இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 10 விக்கெட்டுகளை கைப்பற்றி லார்ட்ஸ் மைதானத்தில் 2 இன்னிங்சுகளிலும் சேர்த்து 10 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் ஆசிய நாட்டு வீரர் என்ற சாதனையை படைத்தார். மேலும், இதுவே இவரது சிறந்த டெஸ்ட் பந்து வீச்சாகும்.

வார்னேவால் முடியவில்லை
இங்கிலாந்து வீரர்கள் எப்போதுமே லெக் ஸ்பின்னுக்கு அடிமைதான். அதிலும் ஆஸி., ஷேன் வார்னே பந்து என்றால் வயிற்றுக்கும், தொண்டைக்கும் நடுவே உருவமில்லாத ஒரு உருண்டை அவர்களுக்கு உருளும். அப்படிப்பட்ட ஷேன் வார்னேவால்கூட, லார்ட்ஸ் மைதானத்தில், ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதிக்க முடியவில்லை. இத்தனைக்கும் அந்த மைதானத்தில் 4 டெஸ்ட் போட்டிகளில் வார்னே ஆடியுள்ளார்.

வலிமையற்ற பேட்டிங்
வார்னேவால் கூட முடியாததை முடித்து காட்டியுள்ளார் யாசிர் ஷா. இதற்கு இங்கிலாந்தின் மோசமான மிடில் ஆர்டர் பேட்டிங் லைனும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. உலக கிரிக்கெட்டில் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக உருவாகி வருகிறார் யாசிர் ஷா.

சுழற்பந்து சூறாவளி
13 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள யாசிர் ஷா, 86 விக்கெட்டுகளை சாய்த்து குறைந்த போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பாக். பவுலர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக முகமது ஆசிப், இதே எண்ணிக்கையிலான டெஸ்டுகளில் 68 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

அதுக்கும் மேல
லார்ட்ஸ் மைதானத்தில் ஷேன் வார்னே 1993ம் ஆண்டு 2 இன்னிங்சுகளிலும், இங்கிலாந்துக்கு எதிராக, 159 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். யாசிர் ஷா 141 ரன்களை விட்டுக்கொடுத்து 10 விக்கெட்டுகளை வீழத்தி அசத்தியுள்ளார்.

இத்தனை நாளா எங்கப்பா இருந்த
30 வயதாகும் யாசிர் ஷா, 2014 அக்டோபரில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பாக். சார்பில், டெஸ்ட் அணியில் காலடி எடுத்து வைத்தார். மறு ஆண்டே, அதாவது 2015 ஜூன் மாதம் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒன்பதே போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனை படைத்தார். உலக அளவில், அதுபோன்ற சாதனை படைத்த 5வது ஸ்பின்னர் யாசிர் ஷா.


Click it and Unblock the Notifications