Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிங் விராட் கோலியை சந்தித்த பாகிஸ்தான் வீரர்கள்.. பயிற்சியின் போது நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

பாலக்கலே: பாகிஸ்தான் அணியின் ஷாகீன் அப்ரிடி, ஹாரிஸ் ராஃப் மற்றும் ஷடாப் கான் உள்ளிட்டோருடன் பயிற்சியின் போது விராட் கோலி நேரம் செலவிட்டுள்ள சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நாளை பாலக்கலேவில் நடக்கவுள்ளது. சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள், முன்னாள் வீரர்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் நாளைய ஆட்டத்திற்காக காத்திருக்கின்றனர். ஏற்கனவே பாகிஸ்தான் அணி நேபாளத்தை வீழ்த்தி அபாரமான ஃபார்மில் உள்ளது.

Pakistan bowlers meets Virat Kohli after the practice session ahead of India vs Pakistan Clash in Asia cup 2023

பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் என்று இந்திய அணிக்கு நிகரான பலத்துடன் பாகிஸ்தான் அணி உள்ளது. இன்னொரு பக்கம் இந்திய அணி நீண்ட நாட்களுக்கு பின் குழுவாக இணைந்திருக்கிறது. இதனால் எந்த வீரர் என்ன ஃபார்மில் இருக்கிறார்கள் என்பதே தெளிவாக தெரியாமல் உள்ளது. இருப்பினும் பயிற்சி முகாமில் இருந்து வந்திருப்பதால், இந்திய அணியின் ஆட்டம் மீது ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

இந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இணைந்து ஒரே நேரத்தில் பாலக்கலேவில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முல்தானில் இருந்து இலங்கை வந்த பாகிஸ்தான் வீரர்கள் வலைபயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் மாலை நேரத்தில் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.

நாளைய போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறுவதால் அந்த வெளிச்சத்திற்கு பழகும் வகையில் இந்திய வீரர்கள் பயிற்சி மேற்கொண்டனர். அதேநேரத்தில் பாகிஸ்தான் அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பாகிஸ்தான் அணியின் ஹாரிஸ் ராஃபை சந்தித்து நலம் விசாரித்தார்.

அதேபோல் பால்கனியில் அமர்ந்து ஷாகின் அப்ரிடி, ஷடாப் கான் உள்ளிட்டோருடன் விராட் கோலி சில நேரங்கள் செலவிட்டார். களத்தில் இரு அணி வீரர்களும் சரிக்கு சமமான மோதவுள்ள நிலையில், இரு அணி வீரர்களும் பயிற்சியில் சந்தித்து அன்பை பரிமாறிக் கொண்டது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Friday, September 1, 2023, 22:07 [IST]
Other articles published on Sep 1, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+