For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நாங்க விளையாட்றது கிரிக்கெட்டே இல்ல.. இப்படி எல்லாம் பண்ணா தோற்க வேண்டியது தான்.. பாபர் அசாம் கோபம்

சென்னை : 2023 ஆம் ஆண்டு ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி மூன்றாவது போட்டியில் தோல்வியை தழுவி இருப்பது அந்த அணியின் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

அதுவும் பலம் குன்றிய ஆப்கானிஸ்தானை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி 283 ரன்கள் என்ற இலக்கை தற்காத்துக் கொள்ள முடியாமல் அதிர்ச்சி தோல்வி தழுவியது.
இந்த நிலையில் இந்த தோல்வி குறித்து பேசிய பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் இந்த தோல்வி எங்களுக்கு மிகவும் காயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Pakistan captain babar azam angry on bowlers performance during Pak vs afg game

நாங்கள் முதலில் பேட்டிங் செய்து நல்ல இலக்கை தான் நிர்ணயித்தோம். ஆனால் பந்துவீச்சில் எங்களுக்கென்று உரிய தகுதியில் நாங்கள் இன்று செயல்படவில்லை. ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்யும்போது மிடில் ஓவர்களில் நாங்கள் விக்கெட்டுகளை எடுக்கவில்லை. அதுதான் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

உலகக்கோப்பை போன்ற தொடரில் உங்களால் ஒரு பிரிவில் சரியாக செயல்பட முடியவில்லை என்றாலும் நீங்கள் போட்டியில் தோல்வியை தழுவீர்கள். நாங்கள் பில்டிங்கில் மிகவும் சொதப்பினோம். பவுண்டரிகளை தவறவிட்டோம். அதிக ரன்களை விட்டுக் கொடுத்தோம். இதனால் தான் இன்றைய ஆட்டத்தில் நாங்கள் தோற்றோம். பந்துவீச்சு நாங்கள் சரியாகத்தான் தொடங்கினோம். ஆனால் ஆட்டத்தின் நடு ஓவர்களில் எங்களால் விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை.

இதற்காக ஆப்கானிஸ்தான் அணியினரை நான் மனதார பாராட்டுகிறேன். அவர்கள் மூன்று பிரிவிலும் சிறப்பாக செயல்பட்டார்கள். அதனால் தான் இன்றைய ஆட்டத்தில் அவர்கள் வெற்றி பெற்றார்கள். நாங்கள் விளையாடுவதற்கு பெயர் கிரிக்கெட்டே கிடையாது. பந்துவீச்சு, பில்டிங் என இரண்டிலுமே நாங்கள் நல்ல கிரிக்கெட்டை வெளிப்படுத்தவில்லை.

எனினும் இன்றைய ஆட்டத்தில் சில நல்ல விஷயங்களும் நடந்து இருக்கிறது. கெட்டதை மட்டுமே குறி வைத்து யோசிக்காமல் நல்ல விஷயங்களையும் பார்க்க வேண்டும். அடுத்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற முயற்சி செய்வோம். எங்கள் அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் சரியான லெங்தில் பந்து வீச முடியாமல் திணறி வருகிறார்கள். எங்களால் எதிரணி பேட்ஸ்மேன்களிடம் நெருக்கடி செலுத்த முடியவில்லை.

Story first published: Monday, October 23, 2023, 22:51 [IST]
Other articles published on Oct 23, 2023
English summary
Pakistan captain babar azam angry on bowlers performance during Pak vs afg game நாங்க விளையாட்றது கிரிக்கெட்டே இல்ல.. இப்படி எல்லாம் பண்ணா தோற்க வேண்டியது தான்.. பாபர் அசாம் கோபம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+