என்ன வயசு ஆச்சு.. அதற்குள் சச்சின், கோலி சாதனையை முறியடித்த பாபர் அசாம்.. குவியும் பாராட்டு
கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபா அசாம் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது டெஸ்ட் தொடரில் பாபர் அசாம், மொத்தமாக 390 ரன்கள் விளாசினார். இதில் அதிகபட்சமாக 196 ரன்கள் குவித்து அசத்தினார்.

இதனையடுத்து, நடைபெற்ற ஒருநாள் தொடரில் பாபர் அசாம் தனி ஆளாக நின்று ஒருநாள் தொடரை வென்றார்.
இதில் பாபர் அசாம் தொடர்ந்து இரண்டு போட்டியில் சதம் விளாசினார். இதில் மூன்றாவது போட்டியில் பாபர் அசாம் 105 ரன்கள் அடித்தன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது 16வது சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் அதிவேகமாக 16 சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பாபர் அசாம் படைத்தார்.
பாபர் அசாம், இந்த சாதனையை தனது 84வது இன்னிங்சிலேயே படைத்துவிட்டார். இதற்கு முன்பு ஹசிம் அம்லா 94 இன்னிங்சில் இந்த சாதனையை படைத்திருந்தார். விராட் கோலி 110 இன்னிங்சில் மூன்றாவது இடத்தில் உள்ளனர். இதே போன்று செஸிங்கில் கேப்டனாக பாபர் அசாம் அடித்த 4வது சதமாகும். தற்போது அவர் கங்குலியின் சாதனையை சமன் செய்துள்ளார்.
இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் விராட் கோலி. அவர் செஸிங்கில் கேப்டனாக 13 சதம் அடித்துள்ளார். இதனிடையே, ஐசிசியின் ஆல் டைம் ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் பாபர் அசாம் 15வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் 16வது இடத்தில் இருந்த சச்சின் டெண்டுல்கரை பாபர் அசாம் பின்னுக்கு தள்ளியுள்ளார். இந்த பட்டியலில் விவியன் ரிச்சர்ட்ஸ் முதலிடத்தில் உள்ளார். விராட் கோலி 6வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications