Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்.. தடுமாறிய பாகிஸ்தான் அணி.. காபாற்றிய பாபர் அசாமின் சதம்

காலே: பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இலங்கையில் மக்கள் போராட்டம் வெடித்துள்ள நிலையில் பாகிஸ்தான் தொடர் நடைபெறுமா என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் திட்டமிட்டபடி போட்டி நேற்று தொடங்கியது. முதலில் பேகட் செய்த இலங்கை அணியின் தொடக்க வீரர் மற்றும் கேப்டனான கருணரத்தினே ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார்.

சந்திமால் அசத்தல்

சந்திமால் அசத்தல்

மற்றொரு தொடக்க வீரர் பெர்னான்டோ 35 ரன்கள் வெளியேற, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேக்யூஸ் டக் அவுட் ஆகி வெளியேறினார். நட்சத்திர வீரர் மெண்டிஸ் தன் பங்கிற்கு 21ன்கள் சேர்த்தார். வழக்கம்போல் மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப, சந்திமால் மட்டும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 115 பந்துகளை எதிர் கொண்டு 76 ஆண்கள் எடுத்தார் .

பாகிஸ்தான் தடுமாற்றம்

பாகிஸ்தான் தடுமாற்றம்

இறுதியில் சிஎஸ்கே வீரர் திக்சனா 38 ரன்கள் சேர்க்க ஸ்ரீலங்கா 222 ரன்களில் ஆட்டம் இழந்தது. பாகிஸ்தான் பந்துவீச்சு தரப்பில் ஷாஹின் சா அப்ரிடி நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனை அடுத்து பாகிஸ்தான அணி தனது முதல் இன்னிங்ஸில் களமிறங்கியது. அப்துல்லா ஷபிக் ,இமாமுல் ஹக் ,அசார் அலி ஆகியோர் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப பாகிஸ்தான அணி 24 ரன்கள் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பாபர் அசாம் சதம்

பாபர் அசாம் சதம்

ஒரு கட்டத்தில் 85 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் இழந்த நிலையில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் தனி ஆளாக நின்று போராடினார். இவருக்கு யாசர் ஷா, ஹசன் அலி, நசீம் ஷா ஆகியோர் கம்பெனி கொடுக்க பாபர் அஸ்ஸாம் 11 பவுண்டரிகள் இரண்டு சிக்ஸர்கள் விளாசி 244 பந்துகளை எதிர் கொண்டு 119 ரன்களை சேர்த்தார்.

தனி ஆளாக போராட்டம்

தனி ஆளாக போராட்டம்

இதனால், பாகிஸ்தான அணி 120 ரன்களில் சுருண்டு இருக்க கூடிய நிலையில் பாபர் அசாம் தனி ஆளாக நின்று அணியை காப்பாற்றியது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இரண்டாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் அந்த அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 36 எண்கள் எடுத்துள்ளது.

Story first published: Sunday, July 17, 2022, 19:08 [IST]
Other articles published on Jul 17, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+