
உலகக் கோப்பை வரலாறு
உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை இந்தியாவும், பாகிஸ்தானும் 12 முறை மோதியுள்ளன. இதில் 12 முறையும் இந்தியாவே வென்றது. ஐ.சி.சி,. உலகக் கோப்பையில் 7 முறையும், டி20 உலகக் கோப்பையில் 5 முறையும் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்து, அதற்கு 2021ஆம் ஆண்டு முற்றுப் புள்ளியை வைத்துள்ளது.

இந்தியாவுடன் வெற்றி
இது குறித்து பேசிய பாபர் அசாம்,2021ஆம் ஆண்டு பாகிஸ்தான் வீரர்களுக்கு சிறந்த ஆண்டாகவே அமைந்தது. அதில் எனக்கு பிடித்த தருணம் எது என்று கேட்டால், உலகக் கோப்பையில் இந்திய அணியை வீழ்த்தியதை தான் கூறுவேன். இந்தியாவை வீழ்த்த அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடினார்கள். அது என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம் என்று கூறினார்

ஆஸ்திரேலியாவுடன் தோல்வி
அதே உலகக் கோப்பையில் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது தமக்கு மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்தி விட்டதாகவும், 2021ஆம் ஆண்டில் மோசமான தருணம் என்று குறிப்பிட்டார். உலகக் கோப்பையை வெல்வோம் என்று நினைத்தோம். ஆனால் அது நடைபெறவில்லை என்று கூறினார்.

சிறந்த வீரருக்கான விருது
2021ஆம் ஆண்டில் பாபர் அசாம் 26 இன்னிங்சில் 939 ரன்களை விளாசினார்.மற்றொரு பாகிஸ்தான் வீரரான ரிஸ்வான் 1326 ரன்களை எடுத்துள்ளார். 2021ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கான பட்டியலில் இருவருமே உள்ளனர், ஆனால் இந்தியர்கள் யாரும் இல்லை.


Click it and Unblock the Notifications











