Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நியூசிலாந்தை வீழ்த்தியது எப்படி? திட்டத்தை வெளிப்படையாக கூறிய பாபர் அசாம்.. செம பிளான் ஆச்சே!

பெங்களூரு : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி தற்போது முக்கிய லீக் ஆட்டமான நியூசிலாந்தை வீழ்த்தி இருக்கிறது. இதன் மூலம் உலககோப்பை புள்ளி பட்டியல் பாகிஸ்தான் அணி ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

பாகிஸ்தான் அணி வரும் 11ஆம் தேதி நடைபெற உள்ள இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று மற்ற அணிகளின் முடிவு பாகிஸ்தானுக்கு சாதகமாக அமைந்தால் அரையிறுதி வாய்ப்பு பாகிஸ்தானுக்கு கிடைத்துவிடும்.

Pakistan captain Babar azam reveals the plan about how his team beat NZ

இந்த நிலையில் நியூசிலாந்தில் வீழ்த்தியது எப்படி என்பது குறித்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கூறிய கருத்தை தற்போது பார்க்கலாம். நாங்கள் முதலில் பேட்டிங் செய்யும்போது எங்கள் மீது நாங்கள் நம்பிக்கை வைத்து விளையாடினோம். 41 ரன்கள் என்ற ஸ்கோரை எட்ட வேண்டும் என்றால் ஒரு நல்ல பாட்னர்ஷிப் அமைந்தாலே போதும். மேலும் இன்றைய நாளில் மழை வரப்போகிறது என்று எங்களுக்கு கண்டிப்பாக தெரியும்.

ஆனால் இவ்வளவு மழை பெய்து ஆட்டமே நிறுத்தப்படும் என்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. இதனால் நியூசிலாந்தை வீழ்த்த வேண்டும் என்றால் பார்ட்னர்ஷிப் அமைப்பது முக்கியம் என்பதை முடிவெடுத்தோம். பக்கர் சமான் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்தார். இதனால் என்னால் முடிந்தவரை பக்கர் சமான் பேட்டிங் செய்யும் அளவுக்கு ஸ்ட்ரைக் வழங்கினேன். மைதானத்தில் ஒரு முனையில் குறைந்த அளவில்தான் பவுண்டரி தூரம் இருந்தது .

எனவே அந்தப் பகுதியை நன்றாக பயன்படுத்திக் கொண்டு நாங்கள் ரன் சேர்க்க வேண்டும் என நினைத்தோம். நாங்கள் எப்போதுமே 100% எங்களுடைய முயற்சியை வெளிப்படுத்துகிறோம் சில சமயம் நாங்கள் எதிர்பார்த்தது போல் செயல்பட முடிவதில்லை. நாங்கள் அடுத்த போட்டியில் வெற்றி பெற்ற பிறகு என்ன நடக்கிறது என்று பார்ப்போம். நாங்கள் பாசிட்டிவாக விளையாட தான் முயற்சி செய்கிறோம். நாங்கள் ஒவ்வொரு போட்டியாக எடுத்துக் கொண்டுதான் விளையாடுகிறோம் என்று பாபர் அசாம் கூறினார்.

Story first published: Saturday, November 4, 2023, 21:08 [IST]
Other articles published on Nov 4, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+