Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாகிஸ்தான் அணிக்குள் பிளவா? கேப்டன் சர்ப்ராஸ் பேச்சால் வீரர்கள் கோபம்.. என்ன பேசினார்?

கேப் டவுன் : பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் குழப்பம் நிலவுவதாக செய்திகள் வந்துள்ளன. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் தோல்வி அடைந்ததில் இருந்து அணிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இரண்டாவது டெஸ்ட் தோல்விக்கு பின் கேப்டன் சர்ப்ராஸ் பந்துவீச்சாளர்களை குற்றம் சாட்டி பேசியதாக கூறப்படுகிறது. அது பற்றி பார்ப்போம்.

தொடரில் பாக். தோல்வி

தொடரில் பாக். தோல்வி

பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் முதல் போட்டியில் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி, இரண்டாவது டெஸ்டிலும் தோல்வி அடைந்து தொடரை இழந்தது.

பெரிய வித்தியாசம் என்ன?

பெரிய வித்தியாசம் என்ன?

இதனால், கேப்டன் சர்ப்ராஸ் அஹ்மது ஏமாற்றத்தில் இருந்தார். தோல்விக்கு காரணம் பற்றி செய்தியாளர்களிடம் பேசுகையில் இரு அணியின் பந்துவீச்சில் பெரிய வித்தியாசம் இருந்தது. எங்கள் அணி பந்துவீச்சாளர்கள் குறிப்பிடத்தகுந்த அளவு பந்து வீசவில்லை என கூறினார்.

பந்துவீச்சு வேகம் தான் காரணம்

பந்துவீச்சு வேகம் தான் காரணம்

எங்கள் அணியின் பந்துவீச்சு வேகம் 130ஐ ஒட்டி இருந்தது. அவர்களின் வேகம் 145ஐ ஒட்டி இருந்தது. தென்னாப்பிரிக்காவில் வேகம் இல்லாமல் பந்து வீசினால் விக்கெட் எடுக்க முடியாது என சாடினார்.

வேகம் குறைவு

வேகம் குறைவு

இந்த முறை பாகிஸ்தான் அணியின் முஹமது ஆமிரின் பெரும்பாலான பந்துவீச்சின் வேகம் அவரது இயல்பான 140இல் இருந்து சரிந்து 120-132க்குள் தான் இருந்தது. மற்ற பந்துவீச்சாளர்களின் வேகமும் சரிந்தது.

அசாதாரண சூழல் நிலவுகிறது

அசாதாரண சூழல் நிலவுகிறது

எனினும், பாகிஸ்தான் கேப்டன் குற்றம் சாட்டியதால் பந்துவீச்சாளர்கள் கோபத்தில் இருப்பதாகவும், இதனால், அணிக்குள் அசாதாரண சூழல் நிலவுவதாகவும் தெரிகிறது. சர்ப்ராஸ் அஹ்மது கேப்டன் பதவியை ராஜினாமா செய்வார் என்றும் ஒரு வதந்தி உலா வருகிறது.

மூன்றாவது டெஸ்ட்

மூன்றாவது டெஸ்ட்

வரும் வெள்ளி அன்று மூன்றாவது டெஸ்ட் போட்டி துவங்க உள்ளது. அதற்குள் பிரச்சனைகள் தீருமா அல்லது பூதாகரமாக மாறுமா? என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Story first published: Wednesday, January 9, 2019, 18:51 [IST]
Other articles published on Jan 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+