Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எலேய்! ஷூ கழண்டா சொல்ல வேண்டிய தானே.. இப்படியா ரன் அவுட் ஆவாங்க?.. பாக். கேப்டன் புலம்பல்

அபுதாபி : பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி அபுதாபியில் நடந்து வருகிறது.

அதில் பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அஹ்மது மற்றும் யாசிர் ஷா இருவரும் பேட்டிங் செய்து வந்த போது இரண்டு ரன் ஓட ஆசைப்பட்டு ரன் அவுட் ஆனார் யாசிர் ஷா.

பாகிஸ்தான் அணியினர் ஆகும் ரன்-அவுட்கள் சமீப காலங்களில் மிகவும் வேடிக்கையாக இருந்து வருகிறது. இந்த ரன் அவுட்டும் அப்படி தான் இருந்தது.

சர்ப்ராஸ் - யாசிர் ஷா பேட்டிங்

இந்த டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து முதலில் 274 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணியில் அசார் அலி, ஆசாத் ஷாபிக் சதம் அடித்தனர். எனினும், அவர்களுக்கு அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வந்தனர். அப்போது எட்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்தனர் கேப்டன் சர்ப்ராஸ் மற்றும் சுழற்பந்துவீச்சாளர் யாசிர் ஷா.

யாசிர் ரன் அவுட்

யாசிர் ரன் அவுட்

133வது ஓவரின் முதல் பந்தை சர்ப்ராஸ் சந்தித்தார். பந்தை தட்டிய சர்ப்ராஸ் இரண்டு ரன்கள் ஓடலாம் என யாசிருக்கு கூறினார். முதல் ரன்னை எளிதாக ஓடினர். இரண்டாவது ரன் சற்று கடினம் தான் என்றாலும் வேகமாக ஓடினால் தப்பிக்கலாம் என்ற நிலை. யாசிர் ஷா இரண்டாவது ரன் ஓடிய போது ஆட்டமிழந்தார். சர்ப்ராஸ் ஓடி முடித்து விட்ட நிலையில், யாசிரால் ஓட முடியவில்லை. ஏன் என்று பார்த்தால் யாசிர் ஷா ஷூவை தவற விட்டது தான் காரணம் என தெரிய வந்தது.

ஷூ கழண்டு விழுந்தது

ஷூ கழண்டு விழுந்தது

யாசிர் முதல் ரன்னை ஓடி முடித்த உடன் திரும்பிய போது அவரது ஷூ கழண்டு கொண்டது. இதனால், சில யாசிரின் வேகம் தடைபட்டது. எனினும், சமாளித்து ஷூ இல்லாமல் யாசிர் ஓடினார். அதற்குள் நியூசிலாந்து வீரர் கிராண்ட்ஹோம் ரன் அவுட் செய்து விட்டார்.

சொல்லி இருக்கலாமே தம்பி!!

சொல்லி இருக்கலாமே தம்பி!!

ரன் அவுட் ஆன பின் நடந்ததை உணர்ந்த கேப்டன் சர்ப்ராஸ், "ஷூவினால் ஓடுவதில் பிரச்சனை என்றால் என்னை ஓட வேண்டாம் என தடுத்து நிறுத்தி இருக்கலாமே!" என புலம்பிக் கொண்டு இருந்தார்.

பாகிஸ்தான் விக்கெட்கள் சரிவு

பாகிஸ்தான் விக்கெட்கள் சரிவு

இந்த போட்டியில் 286 ரன்களுக்கு மூன்று விக்கெட்கள் மட்டுமே இழந்து இருந்த பாகிஸ்தான் அணி அடுத்து 62 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்களை இழந்தது. நியூசிலாந்து அணி இரண்டாம் இன்னிங்க்ஸ்-ஐ ஆடி வருகிறது.

Story first published: Thursday, December 6, 2018, 12:57 [IST]
Other articles published on Dec 6, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+