Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அறிவு இருக்குற யாராவது இப்படி செய்வாங்களா? பதில் சொல்லுங்க பாபர் அசாம்.. வசிம் அக்ரம் தடாலடி

லாகூர் : ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் பாகிஸ்தான் அதிர்ச்சி தோல்வியை தழுவியது தான் தற்போது பேசும் பொருளாக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.

உலக கோப்பையில் இம்முறை சாம்பியன் பட்டத்தை வெல்ல கூட வாய்ப்பு இருக்கிறது என கணிக்கப்பட்ட பாகிஸ்தான் அணி பலம் குன்றிய ஆப்கானிஸ்தானுடன் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Pakistan captain Wasim akram slams Babar azam decision about bowlers rotation

இந்த நிலையில் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியதற்கு பலரும் பாபர் அசாம் மீது பழி சுமத்தி வருகிறார்கள். என்னும் நேற்றைய ஆட்டத்தில் பாபர் அசாம் 92 பந்துகளை எதிர் கொண்டு 74 ரன்கள் சேர்த்தார். ஆனால் பாபர் அசாமின் கேப்டன்சி மிகவும் ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருப்பதாக பலரும் விமர்சித்து வருகிறார்கள். பாகிஸ்தான் அணி தோற்பதற்கு பாபர் அசாம் செய்யும் சிறு சிறு தவறுகள் தான் காரணம் என்று கூறுகிறார்கள்.

ஆனால் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணம். பீல்டிங்கில் சொதப்புவது தான் ஆனால் முன்னாள் கேப்டன் வசிம் அகரம் பாபர் அசாம் செய்த ஒரு தவறை சுட்டிக்காட்டினார். அதில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 46வது ஓவரை சுழற் பந்துவீச்சாளருக்கு பாபர் அசாம் ஏன் குடுத்தார் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் 45 ஓவர்கள் முடிந்துவிட்டது .இன்னும் ஐந்து ஓவர்கள் தான் என்று இருக்கிறது .இரண்டு ஓவர் ஷாகின் ஆப்ரிடியும், இரண்டு ஓவர் ஹாரிஸ் ரவுப்பும், ஒரு ஓவர் ஹசன் அலியும் வீசினார். 50 ஓவரையும் முடித்திருக்கலாம். போட்டியும் கடைசி பந்து வரை கூட சென்றிருக்கும். ஆனால் 46வது ஓவரின் சுழற் பந்துவீச்சாளரான உசாமா மிர்க்கு பாபர் அசாம் கொடுத்தார்

இதற்கான காரணமே எனக்கு புரியவில்லை. இது போன்ற தவறுகளை ஏன் பாபர் அசாம் செய்கிறார் என்பதை கேட்டே ஆக வேண்டும் என்று கூறினார். இதற்கு பதில் அளித்த சோயிப் மாலிக் பாபர் அசாமின் இது போன்ற முடிவுகள் ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்தார். பேட்ஸ்மேனாக மிகச்சிறந்த வீரராக விளங்கும் பாபர் அசாம் ஒரு தலைவராக எப்படி இருக்கிறார் என்பதை நாம் பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, October 24, 2023, 16:13 [IST]
Other articles published on Oct 24, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+