Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக கோப்பைக்கு மீண்டும் சிக்கல்.. பாகிஸ்தான் செய்த குழப்பம்.. வங்கதேசத்திற்கு போட்டிகள் மாற்றம்?

மும்பை : 2023 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தற்போது மீண்டும் ஒரு சிக்கல் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியால் ஏற்பட்டுள்ளது.வரும் அக்டோபர் மாதம் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படுகிறது. இதில் பத்து நாடுகள் பங்கேற்கின்றன.

இதற்காக சென்னை, மும்பை, பெங்களுரு அகமதாபாத் என 12 மைதானங்களை பிசிசிஐ இறுதி செய்துள்ளது. 2011 ஆம் ஆண்டு இந்தியா, வங்கதேசம், இலங்கை என மூன்று நாடுகள் இணைந்து நடத்திய நிலையில் முதல் முறையாக ஒட்டுமொத்த போட்டியையும் இந்தியாவிலே நடத்தப்படுகிறது.இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே அரசியல் பிரச்சனை ஏற்பட்டிருப்பதால் இரு நாடுகளும் ஐசிசி தொடர் தவிர வேறு எந்த ஒரு தொடர்களிலும் விளையாடுவதில்லை.

Pakistan causes big problem for india at icc world cup 2023

இந்த நிலையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் அக்டோபர் மாதம் பாகிஸ்தானில் நடத்தப்படுகிறது.இதில் இந்திய அணி பங்கேற்க மாட்டோம் என அறிவித்தது. இதனை அடுத்து பாகிஸ்தானும் உலக கோப்பை தொடருக்கு வரமாட்டோம் என பதிலடி கொடுத்தது. இந்த சிக்கலை தீர்க்கும் விதமாக அவசர ஆலோசனை கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது.

இதில் ஆசிய கோப்பை போட்டிகளை பாகிஸ்தானில் நடத்தப்படும் என்றும் இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடத்தவும் முடிவு எடுக்கப்பட்டது.இதற்கு அனைத்து நாடுகளும் ஒப்புக்கொண்டன. இந்த நிலையில் தற்போது பாகிஸ்தானும் அதே பார்முலாவை கடைப்பிடிக்கிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட தாங்கள் இந்தியா வரமாட்டோம் என்றும் தாங்கள் விளையாடும் போட்டிகள் அனைத்தும் வங்கதேசத்தில் நடத்த வேண்டும் என்றும் பாகிஸ்தான் திடீரென்று போர் கொடி தூக்கியுள்ளது.இதனை கொஞ்சமும் இந்தியா எதிர்பார்க்கவில்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் ஜெய்ஷா உள்ளார்.

ஒரு வேலை உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான அணி தகுதி பெற்றால் இந்தியா இறுதிப் போட்டியை நடத்த முடியாத இக்கட்டான சூழல் ஏற்பட்டுவிடும். இதனால் பிசிசிஐ க்கு புதிய பிரச்சனை ஏற்பட்ஏற்பட்டுள்ளது.

Story first published: Wednesday, March 29, 2023, 20:02 [IST]
Other articles published on Mar 29, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+