Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாக். எதிராக பயிற்சியாளரே குற்றச்சாட்டு.. செய்தியாளர் சந்திப்பில் நடந்த பரபர சம்பவம்.. என்ன காரணம்?

லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக அதன் பயிற்சியாளரே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தன் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 7 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது.

டி20 உலகக்கோப்பை தயாராகும் வகையில் நடைபெறும் இந்த தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து தொடர்

இங்கிலாந்து தொடர்

அதன்படி இதுவரை நடைபெற்றுள்ள 6 டி20 போட்டிகளில் இரு அணிகளும் தலா 3 வெற்றிகளை பதிவு செய்துள்ளன. கடைசியாக நடைபெற்ற 6வது போட்டியில் பாகிஸ்தான் நிர்ணயித்த 170 ரன்கள் இலக்கை இங்கிலாந்து அணி 14.2 ஓவர்களிலேயே எட்டி அசத்தியது. பாகிஸ்தான் மண்ணில் இங்கிலாந்து இப்படி ஆதிக்கம் செலுத்துவது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

பத்திரிகையாளர் சந்திப்பு

பத்திரிகையாளர் சந்திப்பு

இந்நிலையில் இதுவே தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. போட்டி முடிந்த பிறகு செய்தியாளர் சந்திப்பு நடந்தது. இதில் பாகிஸ்தான் அணி சார்பில் பவுலிங் பயிற்சியாளர் ஷான் டெய்ட் கலந்துக்கொண்டார். அப்போது அவர், " பாகிஸ்தான் வெற்றி பெறும் போது வேறு ஒருவரை அனுப்பிவிட்டு, நன்கு அடிவாங்கும் என்னை அனுப்புகின்றனர். இது மனதிற்கு கவலையாக இருக்கிறது" என அதிருப்தியை கூறிவிட்டார்.

தடுத்து நிறுத்தம்

தடுத்து நிறுத்தம்

இதனை கேட்ட அதிகாரி ஒருவர் உடனடியாக மைக்கை ஆஃப் செய்துவிட்டு, டெயிட்டிடம், நீங்கள் நலமாக தான் இருக்கிறீர்கள், நீங்கள் பேசும் வார்த்தைகள் பாகிஸ்தானுக்கு எதிராக உள்ளது, சர்ச்சையாகும் எனக்கூறினார். இதன்பின்னர் டெயிட் சரியாக பேசினர். எனினும் அவரின் முகத்தில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான அதிருப்தி இருந்தது தெளிவாக தெரிந்தது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் செய்தியாளர் சந்திப்பு பரபரப்புடனே காணப்பட்டது.

பாக். அணியில் குழப்பம்

பாக். அணியில் குழப்பம்

டெயிட் கூறியதை போல பாகிஸ்தான் அணியில் செய்தியாளர்களை சந்திக்கும் போது மட்டும் ஒரு பிரச்சினை இருந்துக்கொண்டே தான் இருக்கிறது. 5வது டி20ல் இங்கிலாந்து வெற்றி பெற்ற போது சாதாப் கான் செய்தியாளர்களை சந்தித்தார். அதன்பின் 6வது டி20ல் வெற்றி பெற்ற போது ஹாரிஸ் ரௌஃப் செய்தியாளர்களிடம் பேசினார். எனவே இதுகுறித்து விரைவில் விளக்கம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, October 1, 2022, 19:16 [IST]
Other articles published on Oct 1, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+