Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"நாங்க தான் பெஸ்ட்".. இந்தியாவிடம் அடிவாங்கிய பின்னும் அடங்காமல் பேசிய பாகிஸ்தான் கோச் வஹாப்

துபாய்: 2026 மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் அவமானகரமான தோல்வி அடைந்த பிறகும் தங்கள் அணியே சிறந்த அணி என பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் வஹாப் ரியாஸ் பேசியுள்ளார். இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 55 ரன்களுக்கு சுருண்டு இந்திய அணியிடம் படுதோல்வி அடைந்தது. 8.4 ஓவர்களிலேயே இந்தியா இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டிக்குப் பின் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய பயிற்சியாளர் வஹாப் ரியாஸ், "இங்குள்ள ஆடுகள சூழ்நிலைகள் எங்கள் அணிக்கு மிகவும் சாதகமாக உள்ளன. எனவே, இந்த ஆசிய கோப்பையை வெல்லும் தகுதி கொண்ட சிறந்த அணி பாகிஸ்தான் தான் என்று நான் இன்னும் ஆணித்தரமாக நம்புகிறேன்" என விசித்திரமாகப் பேசியுள்ளார். 55 ரன்களுக்கு சுருண்டு, 68 பந்துகள் மீதமிருந்த நிலையில் படுதோல்வி அடைந்த ஒரு அணியின் பயிற்சியாளர் இவ்வாறு பேசியது சமூக வலைதளங்களில் கேலிக்குள்ளாகியுள்ளது.

Pakistan Coach Wahab Riaz Claims Team Is Best Despite 55-Run Collapse Against India

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் செய்த தவறுகளை ஆராய்ந்து, அடுத்த போட்டிகளில் அதைத் திருத்திக் கொள்வோம் என்றும் வஹாப் ரியாஸ் கூறினார். மேலும், சமீபகாலமாக பாகிஸ்தான் அணியில் செய்யப்பட்ட 7 முக்கிய மாற்றங்கள் குறித்து முன்னாள் கேப்டன் சனா மிர் விமர்சனம் செய்திருந்தார்.

அதற்கு பதிலளித்த ரியாஸ், "முன்பு விளையாடிய அனுபவம் வாய்ந்த வீராங்கனைகள் பல உலகக் கோப்பை மற்றும் ஆசிய கோப்பை தொடர்களில் விளையாடியும் எங்களுக்கு எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை. அதனால் தான் புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கினோம்" என்று தற்காத்துப் பேசினார்.

என்ன வைஸ் கேப்டன்? வைபவ் சூர்யவன்ஷி கைகளை தட்டி சீண்டிய திலக் வர்மா.. உடனே விழுந்த விக்கெட்

என்ன வைஸ் கேப்டன்? வைபவ் சூர்யவன்ஷி கைகளை தட்டி சீண்டிய திலக் வர்மா.. உடனே விழுந்த விக்கெட்

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியில் முனீபா அலி, ஷாவல் சுல்பிகர் ஆகிய இருவர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர். இந்திய அணியில் ஸ்ரீ சரணி 3 விக்கெட்டுகளையும், தீப்தி சர்மா மற்றும் பிரேமா ராவத் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்திய அணி ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில், பாகிஸ்தான் அணி தனது கடைசி போட்டியில் ஹாங்காங் அணியை வீழ்த்தினால் மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெற முடியும் என்ற இக்கட்டான நிலையில் உள்ளது.

வைபவ் சூர்யவன்ஷி வீக்னஸ்.. அரைசதம் அடிக்கும் முன்பே அவுட்.. துலீப் டிராபி பைனலில் என்ன நடந்தது?

Also Read

வைபவ் சூர்யவன்ஷி வீக்னஸ்.. அரைசதம் அடிக்கும் முன்பே அவுட்.. துலீப் டிராபி பைனலில் என்ன நடந்தது?
Story first published: Sunday, September 6, 2026, 13:09 [IST]
Other articles published on Sep 6, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+