Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாகிஸ்தான் பயிற்சியாளர்கள் எல்லாம் விஷம்.. பேட்டிங் குறையை சரி செய்யவில்லை.. முகமது யூசூப் தாக்கு

லண்டன்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் முகமது யூசுப், அணியின் பயிற்சியாளர்களைக் கடுமையாக விமர்சித்துள்ளார். பாபர் அசாம் உள்ளிட்ட முன்னணி வீரர்களின் பேட்டிங் தொழில்நுட்பக் குறைபாடுகளைச் சரிசெய்ய பயிற்சியாளர்கள் தவறிவிட்டதாகவும், அதுவே அணியின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

சமூக ஊடகத்தில் பதிவு ஒன்றில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ள முகமது யூசுப், சில ஆண்டுகளுக்கு முன்பே பாகிஸ்தான் வீரர்களின் பேட்டிங்கில் உள்ள பலவீனங்களை தான் சுட்டிக்காட்டியதாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும், பாபர் அசாம் மற்றும் பிற வீரர்களுடன் இணைந்து இப்பிரச்சினைகளைச் சரிசெய்யும் தனது முயற்சியை அன்றைய பயிற்சியாளர்கள் தடுத்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

Babar azam

"இந்த பயிற்சியாளர்கள் விளையாட்டுக்கே விஷம் போன்றவர்கள். இவர்களுக்கு எந்தவொரு தொலைநோக்குப் பார்வையும் இல்லை. திறமையான வீரர்களை தவறான வழியில் நடத்தி அவர்களின் முன்னேற்றத்தைத் தடுக்கிறார்கள். நமது கிரிக்கெட் வீரர்கள் யாருடைய ஆலோசனைகளைக் கேட்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளாவிட்டால், அவர்களின் சர்வதேச வாழ்க்கை மிக விரைவாகவே முடிவுக்கு வந்துவிடும்" என்று யூசுப் கடுமையாக எச்சரித்துள்ளார்.

PAK vs ENG: தனி ஆளு சிங்கம் போல் போராடிய பாகிஸ்தான் வீரர்.. 3 ரன்னில் சதத்தை தவறவிட்டாலும் சாதனை

PAK vs ENG: தனி ஆளு சிங்கம் போல் போராடிய பாகிஸ்தான் வீரர்.. 3 ரன்னில் சதத்தை தவறவிட்டாலும் சாதனை

கடந்த ஆண்டு ஜூலை மாதம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பேட்டிங் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய யூசுப், வங்கதேசம் முதல் இங்கிலாந்து வரையிலான தொடர்களில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களின் தொழில்நுட்பக் குறைபாடுகள் அப்பட்டமாக வெளிப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்பே சரி செய்யப்பட்டிருக்க வேண்டிய பலவீனங்கள், தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட்டை சர்வதேச அரங்கில் கடுமையாகப் பாதித்துள்ளதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.

தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் பாகிஸ்தான் அணி, லீட்ஸ் டெஸ்ட் போட்டியில் சந்தித்த தோல்வி உட்பட அடுத்தடுத்து பேட்டிங் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. இந்தத் தொடர் தோல்விகள் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்திற்குள் நிலவும் மோதல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளன. மேலும், அணியின் முன்னாள் வீரர்கள் பலர் சமூக ஊடகங்களிலும் ஊடகங்களிலும் ஒருவரையொருவர் விமர்சித்து வருகின்றனர்.

PAK vs ENG: இமாம் உல் ஹக் பேட்டிங் செய்ய பயப்படுகிறார்.. காயம் அடைந்தது போல் நடிப்பதாக பிராட் புகார்

Also Read

PAK vs ENG: இமாம் உல் ஹக் பேட்டிங் செய்ய பயப்படுகிறார்.. காயம் அடைந்தது போல் நடிப்பதாக பிராட் புகார்

இதற்கிடையில், 2020 முதல் 2022 வரை தலைமைத் தேர்வாளராகப் பணியாற்றிய முகமது வசீம், லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது இமாம்-உல்-ஹக்கிற்கு ஏற்பட்ட காயம் குறித்தும் தனது சந்தேகங்களை எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, August 31, 2026, 15:52 [IST]
Other articles published on Aug 31, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+