Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்தில் பாகிஸ்தான் அணியின் சுற்றுப்பயணம்... அதிக டெஸ்ட்களை விளையாட பாகிஸ்தான் விருப்பம்

கராச்சி : இங்கிலாந்தில் வரும் ஜூலை மாதத்தில் திட்டமிட்டபடி பாகிஸ்தான் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டால், திட்டமிட்டதைவிட அதிக டெஸ்ட் போட்டிகள் நடத்தப்படும் என்று பிசிபி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Recommended Video

Eng vs Pak Test series 2020 | PCB and ECB have a Video Conference

வரும் ஜூன் மாதத்தில் இங்கிலாந்தில் மேற்கிந்திய தீவுகள் அணி திட்டமிட்டிருந்த சுற்றுப்பயணம் கொரோனா வைரஸ் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வரும் மே மாதம் 18ம் தேதி பிசிபி மற்றும் இசிபி அதிகாரிகள், இங்கிலாந்து -பாகிஸ்தான் தொடர் குறித்து வீடியோ கால் மூலம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

ஜூலை -செப்டம்பரில் திட்டம்

ஜூலை -செப்டம்பரில் திட்டம்

இங்கிலாந்தில் வரும் ஜூலை மாதத்தில் பாகிஸ்தான் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 டெஸ்ட் போட்டிகள் உள்ளிட்டவற்றை விளையாட திட்டமிட்டுள்ளது. காலி மைதானங்களில் நடத்தப்பட உள்ள இந்த போட்டிகள் நடத்தப்பட வேண்டிய மைதானங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு ஆகியவை வரும் 18ம் தேதி வீடியோ கால் மூலம் ஆலோசிக்க உள்ளன.

வீரர்களின் பாதுகாப்பு முக்கியம்

வீரர்களின் பாதுகாப்பு முக்கியம்

இங்கிலாந்தில் வரும் ஜூன் மாதத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த மேற்கிந்திய தீவுகள் அணி, கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அந்த தொடரை ஒத்தி வைத்துள்ளது. மேலும் தன்னுடைய வீரர்கள் மற்றும் கேப்டன் உள்ளிட்டவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு, அடுத்தபடியாக தொடரை நடத்த முடிவெடுக்கப்படும் என்றும் அந்நாட்டு கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு முடிவு

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு முடிவு

இந்நிலையில் மேற்கிந்திய தீவகள் அணி தங்களின் தொடரை ஒத்தி வைத்துள்ளதால் ஜூலை மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள பாகிஸ்தான் -இங்கிலாந்து தொடர் முன்னதாக நடக்க வாய்ப்புள்ளதாகவும், மேலும் 3 டெஸ்ட் போட்டிகளுக்கு பதிலாக, 4 அல்லது 5 டெஸ்ட் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

பாதுகாப்புக்கு முக்கியத்துவம்

பாதுகாப்புக்கு முக்கியத்துவம்

இந்நிலையில் வீரர்களின் பாதுகாப்புக்ககு முக்கியத்துவம் அளித்து இங்கிலாந்து தொடரை மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் போர்டு ரத்து செய்துள்ளது போல, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் இசிபியின் எந்த கோரிக்கையையும் ஏற்பதற்கு முன்பாக மிகுந்த எச்சரிக்கையுடன் முடிவுகளை எடுக்க வேண்டும் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Story first published: Monday, May 11, 2020, 16:02 [IST]
Other articles published on May 11, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+