Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவை பார்த்து ஈயடிச்சான் காப்பி அடிக்கும் பாக். கிரிக்கெட்.. இங்க டிராவிட்.. அங்க யூனிஸ் கான்!

இஸ்லாமாபாத் : இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கும் ஒரு நடவடிக்கையை, பாகிஸ்தான் அப்படியே பின்பற்ற உள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் தற்போது வளர்ச்சிப் பாதையில் செல்கிறதா என்பது பெரும் கேள்விக் குறியாக உள்ளது. குறிப்பாக அடுத்த தலைமுறை வீரர்களை தயார் செய்வதில் பாகிஸ்தான் மற்ற நாடுகளை விட பின்தங்கியே உள்ளது.

இந்தியாவை பார்த்து..

இந்தியாவை பார்த்து..

இந்த நிலையில், இதற்கான நடவடிக்கையை எடுக்க பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் எஹ்சான் மானி முடிவெடுத்துள்ளார். அதன் முதல் படியாக இந்தியா போலவே இளம் வீரர்களுக்கு பயிற்சி அளிக்க முன்னாள் வீரர்களை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளது.

ராகுல் டிராவிட் பயிற்சி

ராகுல் டிராவிட் பயிற்சி

இதற்கு இந்திய அணி சில ஆண்டுகளுக்கு முன் இளம் வீரர்களை வளர்க்க, இந்தியா ஏ, அண்டர் 19 ஆகிய அணிகளுக்கு முன்னாள் இந்திய வீரர் ராகுல் டிராவிட்-ஐ நியமித்தது. இந்த நடவடிக்கையை அடுத்து இந்திய அணிக்கு ஆடும் அளவுக்கு ஏராளமான இளம் வீரர்கள் வரிசை கட்டி நிற்க ஆரம்பித்தார்கள்

பயிற்சி பெற்ற வீரர்கள்

பயிற்சி பெற்ற வீரர்கள்

உதாரணமாக, குல்தீப் யாதவ், சாஹல், ப்ரித்வி ஷா, ஷுப்மன் கில், கருண் நாயர், விஜய் ஷங்கர், மாயன்க் அகர்வால், கலீல் அஹ்மது, ஹனுமா விஹாரி என இந்திய அணியில் இடம் பிடித்த பல வீரர்கள் டிராவிட்டின் கீழ் பயிற்சி பெற்று இந்தியா ஏ, அண்டர் 19 அணியில் இடம் பெற்று போட்டிகளில் ஆடியவர்களே!

பயிற்சி அளிக்க யூனிஸ் கான்

பயிற்சி அளிக்க யூனிஸ் கான்

இந்த நடைமுறை பெரிய அளவில் கை கொடுத்துள்ளதை அடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் தற்போது தங்கள் நாட்டின் நட்சத்திர பேட்ஸ்மேனாக வலம் வந்த யூனிஸ் கான்-ஐ இளம் வீரர்களுக்கு பயிற்சி அளிக்க நியமிக்க உள்ளதாக கூறி உள்ளது.

சிறந்த வீரர் யூனிஸ் கான்

சிறந்த வீரர் யூனிஸ் கான்

யூனிஸ் கான் பாகிஸ்தான் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 10,000 ரன்கள் அடித்த முதல் வீரர் ஆவார். அவர் தனக்கு முழு சுதந்திரம் அளித்தால் இளம் வீரர்களுக்கு பயிற்சி அளிக்க தயாராக இருப்பதாக கூறி உள்ளார்.

டிராவிட் - யூனிஸ் கான்

டிராவிட் - யூனிஸ் கான்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு எப்படி டிராவிட் நம்பகமான வீரராக திகழ்ந்தாரோ, அதே போல யூனிஸ் கான் பாகிஸ்தான் அணிக்கு இருந்தார். இளம் வீரர்களுக்கு பயிற்சி அளிக்க இந்தியா டிராவிட்டை நியமித்தது போல, ஏறக்குறைய அவருக்கு நிகரான வீரரான யூனிஸ் கானை பாகிஸ்தான் கிரிக்கெட் நியமிக்க உள்ளது.

ஈயடிச்சான் காப்பி

ஈயடிச்சான் காப்பி

காப்பி அடிக்கலாம். அதுக்கு ஒரு வரைமுறை இல்லையா? இப்படியா ஈயடிச்சான் காப்பி அடிப்பாங்க? என கேலி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை இருந்தாலும், பாகிஸ்தான் கிரிக்கெட் நல்ல முயற்சியை தொடங்கி உள்ளது. அதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.

Story first published: Wednesday, February 13, 2019, 15:14 [IST]
Other articles published on Feb 13, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+