Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உங்க ஊர்ல டிராவிட்னா.. எங்க ஊர்ல இவரு.. இது எப்படி இருக்கு.. இந்தியாவை பார்த்து காப்பி அடித்த பாக்.!

கராச்சி : பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு பிசிசிஐ-யை பார்த்து கிரிக்கெட் அணியை முன்னேற்றத் துவங்கி உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஐந்து, ஆறு வருடங்களில் பெரிய முன்னேறத்தை சந்தித்துள்ளது.

அதற்கு முக்கிய காரணம் படிப்படியாக முன்னாள் வீரர்களை கிரிக்கெட் நிர்வாகத்தில் பங்கேற்க வைத்தது தான். அதே விஷயத்தை காப்பி அடித்து வருகிறது பாகிஸ்தான்.

என்ன செய்தது பாகிஸ்தான்?

என்ன செய்தது பாகிஸ்தான்?

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீபத்தில் தற்காலிக பேட்டிங் பயிற்சியாளர் யூனிஸ் கானுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பதவி நீட்டிப்பு அளித்து அவரை ஒப்பந்தம் செய்துள்ளது. அவர் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் முக்கிய முன்னாள் வீரர் என்பதோடு முதல் முறையாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் பயிற்சியாளராக இணைந்துள்ளார்.

டெஸ்ட் ஜாம்பவான்

டெஸ்ட் ஜாம்பவான்

இந்தியாவுக்கு எப்படி ராகுல் டிராவிட் டெஸ்ட் ஜாம்பவானாக வலம் வந்தாரோ, அதே போல பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் யூனிஸ் கான் சிறந்த பேட்ஸ்மேன் ஆக வலம் வந்தார். 118 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 10, 099 ரன்கள் குவித்துள்ளார்.

டிராவிட் செயல்பாடு

டிராவிட் செயல்பாடு

இந்தியாவில் ராகுல் டிராவிட் ஐந்து ஆண்டுகளுக்கு முன் அண்டர் 19 மற்றும் இந்தியா ஏ அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அப்போது டிராவிட் பட்டை தீட்டி, அடையாளம் காணப்பட்ட பல வீரர்கள் இந்திய அணியில் தற்போது ஆடி வருகின்றனர்.

பெரிய பதவி

பெரிய பதவி

அதன் பின் ராகுல் டிராவிட்டுக்கு இளம் வீரர்களை கண்டறிந்து பயிற்சி அளிக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் பதவி அளிக்கப்பட்டது. பிசிசிஐ தொடர்ந்து ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, ரவி சாஸ்திரி உள்ளிட்ட முன்னாள் வீரர்களுக்கு பயிற்சியாளர் பதவிகளை அளித்து வருகிறது.

இரண்டு வருடம் தாமதம்

இரண்டு வருடம் தாமதம்

அதைப் பார்த்த முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பும் அதை பின்பற்ற வேண்டும், முன்னாள் வீரர்களை உயர் பதவியில் அமர்த்த வேண்டும் என கோரி வந்தனர். இரண்டு ஆண்டுகள் தாமதமாக அதை செயல்படுத்தியது பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு.

பதவிகள்

பதவிகள்

முதலில் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக்கை பயிற்சியாளராக நியமித்த கிரிக்கெட் போர்டு அடுத்து யூனிஸ் கான், முகமது யூசுப்புக்கு இளம் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் மையத்தில் பதவி அளித்தது. இதில் யூனிஸ் கான் பாகிஸ்தான் தேசிய அணியுடன் தற்காலிகமாக இங்கிலாந்து தொடருக்கு பேட்டிங் பயிற்சியாளராக உடன் சென்றார்.

பதவி நீட்டிப்பு

பதவி நீட்டிப்பு

இங்கிலாந்து தொடரில் யூனிஸ் கான் செயல்பாடு திருப்திகரமாக இருந்ததாக வீரர்கள் கூறியதை அடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அவருக்கு 2022 டி20 உலகக்கோப்பை தொடர் வரை பேட்டிங் பயிற்சியாளர் பதவி அளித்து ஒப்பந்தம் செய்துள்ளது.

ஆஸி, இங்கிலாந்து முன்னிலை

ஆஸி, இங்கிலாந்து முன்னிலை

முன்னாள் வீரர்களை வைத்து தேசிய அணியை கட்டமைக்கும் பணியில் இந்திய அணியை பார்த்து பாகிஸ்தான் காப்பி அடித்தாலும், இந்திய அணிக்கும் முன்னோடி ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாடுகள் தான். அவர்கள் எப்போதும் தங்கள் முன்னாள் வீரர்களை உயர் பதவிகளில் நியமித்து வருகின்றனர்.

Story first published: Friday, November 13, 2020, 13:26 [IST]
Other articles published on Nov 13, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+