Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன சொல்றீங்க? இந்தியா மீது நடவடிக்கை எடுக்க போறீங்களா… இல்லையா? ஐசிசியிடம் கம்பு சுத்தும் பாக்.

இஸ்லாமாபாத்:ராணுவ தொப்பியை அணிந்து விளையாடிய இந்திய அணி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் முறையிட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், இந்திய அணி இந்திய அணி வீரர்கள் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்து ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ராணுவ தொப்பியை அணிந்து விளையாடினர்.

அதுமட்டுமின்றி, போட்டியில் கிடைக்கும் ஊதியத்தை உயிரிழந்த ராணுவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்று கேப்டன் கோலி கூறியிருந்தார். இந்திய அணியின் இந்த செயல்பாடுகள் போற்றத்தக்க வகையில் இருந்தது.

பாக். கோரிக்கை

பாக். கோரிக்கை

இந்நிலையில், இந்திய அணி ராணுவ தொப்பியுடன் விளையாடியதால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் முறையிட்டுள்ளது.இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் இஷான் மனி கூறியதாவது:

நம்பிக்கை தன்மை

நம்பிக்கை தன்மை

கிரிக்கெட்டையும், விளையாட்டையும் அரசியலுக்காக பயன்படுத்த கூடாது. இந்திய அணி வீரர்கள் இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளதால் கிரிக்கெட்டில் அவர்களுக்கு இருந்த நம்பிக்கைத் தன்மையை இழந்துவிட்டனர்.

தடை விதித்த ஐசிசி

தடை விதித்த ஐசிசி

முன்னதாக,இங்கிலாந்து வீரர் மொயின் அலி மற்றும் தென் ஆப்ரிக்கா சுழற் பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் ஆகியோர் தீவிரவாத தாக்குதலை கண்டித்து கருப்பு பட்டை அணிந்து விளையாடியனர். அதனால், ஐசிசி அவர்களுக்கு தடை விதித்தது.

பாக். வலியுறுத்தல்

பாக். வலியுறுத்தல்

அவர்களுக்கு வழங்கிய தண்டனையைப் போலவே இந்திய அணி மீதும் ஐசிசி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.முன்னதான ஐசிசியிடம் அதற்கான அனுமதி வாங்கப்பட்டது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, March 11, 2019, 18:42 [IST]
Other articles published on Mar 11, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+