Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்-ஐ முந்திய பிஎஸ்எல்.. புள்ளிவிவரத்துடன் விமர்சித்த பாக். வாரிய தலைவர்.. இந்திய ரசிகர்கள் கோபம்

லாகூர்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரை விட பாகிஸ்தான் சூப்பர் லீக் தான் மிகச்சிறந்தது என அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் நஜம் சேதி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் தொடரை போலவே பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் நடந்து வருகிறது. 2017ம் ஆண்டு தொடங்கிய இந்த தொடரின் 7வது சீசன் நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளது.

லாகூரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் லாகூர் குலாண்டர்ஸ் மற்றும் முல்தான் சுல்தான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் கடைசி நேரத்தில் லாகூர் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி கண்டது.

சர்ச்சை கருத்து

சர்ச்சை கருத்து

பிஎஸ்எல் தொடரிலேயே இப்படி ஒரு இறுதிப்போட்டியை இதுவரை கண்டதில்லை என்பதை போல கடைசி பந்து வரை படு சுவாரஸ்யமாக சென்றது. இந்நிலையில் இந்த தொடரை புகழ்ந்து பேசுவதாக நினைத்து ஐபிஎல்-ஐ மோசமாக விமர்சித்துள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜம் சேதி. செய்தியாளர்களை சந்தித்த அவர், ஐபிஎல்-ஐ விட பிஎஸ்எல் சிறப்பான ஒன்று. அதைவிட ஒருபடி மேல் சென்றுவிட்டதாக கூறியுள்ளார்.

புள்ளிவிவரம்

புள்ளிவிவரம்

இரு தொடர்களின் டிஜிட்டல் ஒளிபரப்பை பற்றி பார்க்கலாம். பிஎஸ்எல் தொடரின் ரேட்டிங் நேரலையிலேயே 11 ஆக உள்ளது. ஒட்டுமொத்தமாக 18 அல்லது 20 புள்ளிகளை தாண்டிவிடுகிறது. அதாவது 15 கோடி ரசிகர்களுக்கும் மேல் பிஎஸ்எல் தொடரை பார்த்து வருகின்றனர். அதுவும் பாகிஸ்தான் சூப்பர் லீக் 6 ஆண்டுகளுக்கு முன்பு தான் தொடங்கி முன்னேறி வருகிறது. இந்த நிலையின் போது ஐபிஎல் தொடரெல்லாம் 13 கோடி பேர் தான் பார்த்துக்கொண்டிருந்தனர். எனவே ஐபிஎல்-ஐ விட பாகிஸ்தான் சூப்பர் லீக் சிறப்பான ஒன்று.

பழைய பிரச்சினை

பழைய பிரச்சினை

இந்தியா - பாகிஸ்தான் வாரியங்களுக்கு இடையே ஆசிய கோப்பை பிரச்சினை வெடித்து வருகிறது. ஆசிய கோப்பையை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் வைத்துள்ளது. ஆனால் பாகிஸ்தானுக்கு இந்திய வீரர்கள் பயணிக்க மாட்டார்கள், பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக வேறு நாட்டிற்கு மாற்றப்பட வேண்டும் என ஜெய் ஷா கூறினார். இதனால் கொந்தளித்த பாகிஸ்தான் வாரியம் என்ன நடந்தாலும், நடத்தியே தீருவோம் எனக்கூறி வருகின்றனர்.

கடும் சவால்

கடும் சவால்

அதாவது ஒருவேளை பாகிஸ்தானுக்கு இந்திய அணி பயணிக்கவில்லை என்றால், இந்தாண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் வராது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதாமல் எப்படி ஒரு சுவாரஸ்ய தொடரை நடத்திவிடுகின்றனர் என்பதை பார்க்கலாம் என நஜம் சேதி சவால் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, March 20, 2023, 10:19 [IST]
Other articles published on Mar 20, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+