Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

10 வீரர்களை நீக்கிய பாக். அணி.. இங்கிலாந்து தொடருக்கு முன் அதிரடி.. காரணம் கொரோனா!

இஸ்லாமாபாத் : கொரோனா வைரஸ் காரணமாக 10 பாகிஸ்தான் வீரர்களை அணியில் இருந்து நீக்கி உள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு.

Recommended Video

Pakistan வீரர்கள் England பயணம்... கைவிடப்பட்ட கொரோனா பாதித்த வீரர்கள்

இங்கிலாந்து நாட்டில் நடைபெற உள்ள டெஸ்ட் தொடருக்கு பாகிஸ்தான் அணி கிளம்பிச் செல்ல உள்ளது. அதற்கு முன்னதாக இந்த அதிரடி நீக்கத்தை செய்துள்ளது.

இங்கிலாந்து சுற்றுப்பயணம்

இங்கிலாந்து சுற்றுப்பயணம்

இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் டி20 தொடர் ஆகஸ்ட் மாதம் முதல் நடைபெற உள்ளது. அதற்காக பாகிஸ்தான் அணி வீரர்கள் கடந்த சில வாரங்களாக பயற்சியில் ஈடுபட்டனர்.

10 வீரர்களுக்கு கொரோனா வைரஸ்

10 வீரர்களுக்கு கொரோனா வைரஸ்

இங்கிலாந்து கிளம்பும் முன் வீரர்களுக்கு இரண்டு முறை கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவில் 10 வீரர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து அவர்கள் தங்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

அதிரடி முடிவு

அதிரடி முடிவு

அந்த 10 வீரர்களையும் இங்கிலாந்து தொடருக்கான உத்தேச அணியில் இருந்து நீக்கி உள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு. ஜூலை 28 அன்று இங்கிலாந்து கிளம்ப உள்ள நிலையில் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. மீதமுள்ள வீரர்கள் மட்டும் இங்கிலாந்து செல்ல உள்ளனர்.

மீண்டும் பரிசோதனை

மீண்டும் பரிசோதனை

பாதிப்புக்கு உள்ளான வீரர்கள் 14 நாட்கள் கழித்து எடுக்கப்படும் பரிசோதனையில் மீண்டு வந்தால், அவர்கள் இங்கிலாந்துக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு கூறி உள்ளது. இங்கிலாந்து செல்லும் வீரர்கள் அங்கே 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நீக்கப்பட்ட பத்து வீரர்கள்

நீக்கப்பட்ட பத்து வீரர்கள்

கொரோனா வைரஸ் காரணமாக நீக்கப்பட்ட பத்து வீரர்கள் - ஹைதர் அலி, பாக்கர் ஜமான், முகமது ரிஸ்வான், ஷதாப் கான், ஹாரிஸ் ரௌப், முகமது ஹாஸ்னைன், காஷிப் பாட்டி, வாஹாப் ரியாஸ், இம்ரான் கான், முகமது ஹபீஸ்.

Story first published: Saturday, June 27, 2020, 21:16 [IST]
Other articles published on Jun 27, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+