Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பங்காளி, 450 கோடி கொடு.. இல்லைனா கோர்ட்டுக்கு வா.. பிசிசிஐயிடம் மல்லுக்கட்டும் பாகிஸ்தான்!

இஸ்லாமாபாத்: இந்தியா, பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டிகள் நடக்குமா என்பது குறித்து பல நாட்களாக விவாதம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு பின்பு நிறைய அரசியல் இருப்பதால் பல வருடங்களாக இருநாடுகளும் சுற்றுப்பயணங்களில் ஈடுபடாமல் இருந்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதுகுறித்து முடிவு எடுக்கும்படி நேரடியாக பிசிசிஐயிடம் சண்டைக்கு சென்று இருக்கிறது. மேலும் பிசிசிஐ அமைப்பிடம் இழப்பீட்டு தொகையாக பணம் கேட்டு இருக்கிறது.

இழப்பீட்டு தொகையாக 450 கோடி பணம் கொடுக்கவில்லை என்றால் ஐசிசியிடம் முறையிடுவோம் என்றும் மிரட்டி வருகிறது.

இந்தியா - பாகிஸ்தான் போட்டி

இந்தியா - பாகிஸ்தான் போட்டி

2012 டிசம்பரில் தொடங்கி 2013 ஜனவரி வரை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் இந்தியாவில் நடைபெற்றது. அதுதான் இந்தியாவும் பாகிஸ்தானும் கடைசியாக தனியாக மோதிய தொடர். அதன்பின் இந்தியாவில் தனியாக தொடர் விளையாட பாகிஸ்தானும் வரவில்லை, இந்தியாவும் பாகிஸ்தான் செல்லவில்லை. உலகக் கோப்பை போட்டி, ஆசிய கோப்பை, டி-20 கோப்பை போன்ற தொடர்களில் மட்டுமே இந்தியா பாகிஸ்தானுடன் விளையாடியது. இருநாட்டு ரசிகர்களும் எப்போது முன்பு போல கிரிக்கெட் தொடர் நடக்கும் என்று காத்துக் கொண்டு உள்ளனர்.

பிசிசிஐ ஒப்பந்தம்

பிசிசிஐ ஒப்பந்தம்

இந்தநிலையில் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் வண்ணம் 2014 ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது. பிசிசிஐ அமைப்பு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் செய்த இந்த ஒப்பந்தத்தில் 2015 -2023 க்குள் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் நிறைய போட்டிகள் நடத்தவேண்டும் என்று முடிவானது. அதன்படி குறைந்தது 6 ஒருநாள் தொடர்களாவது நடக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

ஒப்பந்தத்தை மீறியது

ஒப்பந்தத்தை மீறியது

ஆனால் பிசிசிஐ அமைப்பு இந்த ஒப்பந்தத்தை பின்பற்றாமல் போனது. மேலும் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதற்கான எந்தவிதமான முன்னெடுப்புகளையம் பிசிசிஐ நடத்தாமல் இருந்தது. பல்வேறு அரசியல் பிரச்சனைகள் காரணமாக போட்டிகள் நடக்கவில்லை என்று கூறப்பட்டது. இதற்கு பின்னால் சில அரசியல் தலைவர்கள் இருப்பதாக சந்தேகங்கள் எழுப்பப்பட்டது.

முறையீடு

முறையீடு

தற்போது இதுகுறித்து தகுந்த விளக்கம் அளிக்கும் படி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்தியாவிடம் கேட்டு இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து 450 கோடி ரூபாய் இழப்பீடும் கேட்டு இருக்கிறது. மேலும் இது குறித்த தகவல்களை அந்த அமைப்பு ஐசிசியிடம் சமர்பித்து இருக்கிறது. பிசிசிஐ விரைவில் பதில் அளிக்கவில்லை என்றால் வழக்கு தொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.

Story first published: Friday, December 1, 2017, 15:59 [IST]
Other articles published on Dec 1, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+