Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த பாக். முடிவே எடுக்காமல் திரும்பி வந்த ஜெய்ஷா.. என்ன நடந்தது

பஹ்ரைன் : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் இருந்து மாற்றப்பட்டால், உலக கோப்பை தொடரிலிருந்து விலகி விடுவோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டல் விடுத்துள்ளது.

வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் இந்த தொடரை பாகிஸ்தானில் நடத்தினால் இந்திய அணி பங்கேற்காது என்று பிசிசிஐ தெரிவித்தது. இது குறித்து இறுதி முடிவு எடுக்க இன்று பஹ்ரைனில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அப்போது, கடந்த 3 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை பாகிஸ்தானில் வெற்றிக்கரமாக நடத்தியதாக கூட்டத்தில் பிசிபி கூறியுள்ளது.

பாகிஸ்தான் கேள்வி

பாகிஸ்தான் கேள்வி

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகள் எந்த பிரச்சினையும் இன்றி கிரிக்கெட் போட்டியில் விளையாடிய போது இந்தியா மட்டும் மறுப்பது ஏன் என்று இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் பேசியுள்ளது.

வேறு நாடு

வேறு நாடு

இதற்கு பதில் அளித்த ஜெய்ஷா, தங்களுடைய நாட்டு அரசு அனுமதி தரவில்லை என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்ள்ளதாகவும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமே போட்டியை வேறு நாட்டில் நடத்தினால் கூட தங்களுக்கு எவ்வித தடையும் இல்லை ஆனால் அதற்கான நிதி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியட கேள்வி எழுப்பியுள்ளார்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

அதற்கு, தங்கள் நாட்டில் பிரச்சின இல்லாத போது, நாங்கள் ஏன் மாற்ற வேண்டும் என்றும், இந்தியா ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகினால் தாங்கள் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பையில் கண்டிப்பாக பங்கேற்க மாட்டோம் என்றும் கூறியுள்ளது.

மார்ச் மாதம் கூட்டம்

மார்ச் மாதம் கூட்டம்

பாகிஸ்தான் தங்களுடைய பதிலில் உறுதியாக இருந்ததால் இந்த கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் நிறைவு பெற்றது. இந்த விவகாரம் குறித்து வரும் மார்ச் மாதம் மீண்டும் பேசலாம் என்று ஆசிய கிரிக்கெட் சங்க உறுப்பினர் நாடுகள் முடிவு எடுத்துள்ளது. பாகிஸ்தானில் ஆசிய கோப்பை நடத்தப்படவில்லை என்றால், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Sunday, February 5, 2023, 22:50 [IST]
Other articles published on Feb 5, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+