துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் தொடர்ந்து மூன்று முறை தோல்வியை தழுவி இருக்கிறது. இது அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களை கோபம் அடைய செய்துள்ளது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு இருந்தும் வழக்கம் போல் அந்த அணி பேட்டிங்கில் தடுமாறி தோல்வியை தழுவி இருந்தது.
இதனால் பாகிஸ்தானில் மிகப்பெரிய அதிருப்தி அலை அந்நாட்டு வீரர்களுக்கு எதிராக ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு தண்டனை வழங்கும் விதமாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஒரு முடிவை எடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகிறது.

அதன்படி பாகிஸ்தான் வீரர்கள் பல்வேறு வெளிநாட்டு தொடர்களில் விளையாடுகின்றன. அவர்களுக்கு எந்தவித தடையும் வழங்கப்படவில்லை. பொதுவாக வெளிநாட்டில் விளையாடும்போது அனுபவம் அதிகம் கிடைக்கும். இதன் மூலம் சொந்த அணிக்காக விளையாடும்போது அந்த அனுபவம் கைகொடுக்கும்.
ஆனால் பாகிஸ்தான் வீரர்கள் இந்திய வீரர்கள் போல் அல்லாமல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகள் நடத்தும் டி20 லீக் போட்டிகளில் விளையாடும் எந்த பயனும் இல்லை என்பதால் அவர்களுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்துவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் இனி பாகிஸ்தான் வீரர்கள் வெளிநாடுகளில் சென்று எந்த ஒரு டி20 லீக் தொடரிலும் விளையாட முடியாது. இந்தியா இதே போன்ற ஒரு முடிவை தான் பல ஆண்டுகளாக கடைப்பிடித்து வருகிறது. ஆனால் இந்திய வீரர்களுக்கு ஐபிஎல் மற்றும் ஆண்டு ஊதியம் என பல கோடி ரூபாய் வழங்கப்படும்.
ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு ஊதியம் குறைவு என்ற நிலையில் வெளிநாடு தொடர்களில் பங்கேற்று சம்பாதித்து வந்தனர். ஆனால் தற்போது ஆசிய கோப்பை தொடரில் மூன்று முறை இந்தியாவுக்கு எதிராக தோல்வி அடைந்ததன் மூலம் தற்போது இதுவும் பறிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள ஐல்டி 20 மற்றும் பிக் பாஸ் லீக் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
அதற்கு பதிலாக பாகிஸ்தான் நாட்டில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் வீரர்கள் விளையாட ஊக்குவிக்கப்படுவார்கள் என தெரிகிறது. தற்போது நடைபெற்று வரும் ஐல்டி 20 ஏலத்தில் 16 பாகிஸ்தான் வீரர்கள் விளையாட தங்களது பெயரை கொடுத்திருந்தனர். இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் பிக் பாஸில் 7 பாகிஸ்தான் வீரர்கள் விளையாட ஒப்பந்தமாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.