Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடைபெறுமா? அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு.. இந்தியாவும் பங்கேற்பு

லாகூர் : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தானில் நடத்துவதா இல்லையா என்பது குறித்து அவசர கூட்டம் நாளை நடைபெறுகிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவராக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நஜாம் சேத்தி ACC தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் ஒரு அவசர சந்திப்பை நடத்த உள்ளார்.

மேலும் துபாயில் ILT 20 தொடக்க விழாவின் போது ACC உறுப்பினர்கள் முன்னிலையில் அவர் இந்த கூட்டத்தை நடத்துமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

அவசர கூட்டம்

அவசர கூட்டம்

தற்போது அதன் பேரிலே இந்த கூட்டம் பஹ்ரைனில் நடைபெறும். 2023 ஆசிய கோப்பையின் தலைவிதியை முடிவு செய்வதே இந்த கூட்டத்தின் முக்கிய முடிவாக இருக்கும். பாகிஸ்தானில் நடந்தால் இந்தியா போட்டியில் பங்கேற்காது என்பதால், வேறு இடத்திற்கு மாற்றப்படுவதே அதிக வாய்ப்பு உள்ளது.

2 நாடுகள் விருப்பம்

2 நாடுகள் விருப்பம்

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆசிய கோப்பை நடத்தப்பட்டது மற்றும் அதை மீண்டும் அங்கே நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்டை நாடுகளுக்கு இடையிலான அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில் நடுநிலையான இடமாக போட்டியை நடத்த கத்தாரும் ஆர்வம் காட்டியுள்ளது. இது ஏற்கனவே சில கிரிக்கெட் போட்டிகள் மற்றும் கிரிக்கெட் லீக்குகளை நடத்தியது.

பிடிவாதம்

பிடிவாதம்

பாகிஸ்தானுக்கு எதிராக சூழல் திரும்பி இருந்தாலும், அதன் தலைவர் நஜாம் சேத்தி அவர்கள் ஹோஸ்டிங் உரிமைகளைத் தக்கவைத்துக்கொள்வதை உறுதிசெய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். இதன் காரணமாகவே பஹைரனல் நாளை அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

அபாயம்

அபாயம்

ஒருவேளை பாகிஸ்தானில் நடத்த இந்தியா எதிர்ப்பு தெரிவித்து போட்டி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டால், இந்தியாவுக்கு வந்து நாங்கள் விளையாட மாட்டோம் என்று பாகிஸ்தானும் அறிவிக்க வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட், உலக ஹாக்கி போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, February 3, 2023, 20:14 [IST]
Other articles published on Feb 3, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+