இந்தியா ஏன் தோத்துச்சு? வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்காம பேச, இப்போ பயிற்சியாளர் பதவி அம்பேல்..!
இஸ்லாமாபாத்: இந்திய அணியை பற்றி கருத்து கூறிய பாக் முன்னாள் வீரர் பாசித் அலி விளக்கம் அளிக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருக்கிறது.
உலக கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான பைனலில் வெற்றி பெற்று இங்கிலாந்து கோப்பையை கைப்பற்றியது. அரையிறுதிக்கு முன்னேறும் அணி என்று எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் பெரும் ஏமாற்றத்துடன் லீக் தொடரில் இருந்து வெளியேறியது.
அந்த அணியின் வெளியேற்றம், பெரும் விமர்சனங்களை எழுப்பியிருக்கிறது. ஒரு கட்டத்தில் பாகிஸ்தானின் வெளியேற்றத்துக்கு இந்தியா தான் காரணம் என்றும், முக்கிய போட்டிகளில் வேண்டுமென்றே தோற்றே பாகிஸ்தானை வெளியேற்ற காரணமாக இருந்தது என்று முன்னாள் வீரர்கள் பலரும் கூறியிருந்தனர்.

இந்தியா தான் காரணம்
பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி கூறுகையில், இங்கிலாந்து மற்றும் பிற அணிகளுடன் இந்தியா வேண்டுமென்றே தோற்றது. அதனால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறாமல் பார்த்துக் கொண்டது என்றார். அவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

வலியுறுத்தல்
இந்நிலையில், இதுபற்றி விளக்கம் அளிக்குமாறு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தி உள்ளது. பாசித் அலி ஒரு டெஸ்ட் வீரர். வாரியத்தில் பல திட்டங்களில் இருந்திருக்கிறார்.

வாரியத்துக்கு சங்கடம்
அணியின் இப்போதைய சூழ்நிலையில், பொறுப்பற்ற முறையில் அலட்சியமாக கருத்துகளை கூறக் கூடாது. அவருடைய கருத்து, கிரிக்கெட் வாரியத்துக்கு சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபோன்ற ஆதாரமற்ற கருத்தை கூறிய அவர் விளக்கமளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

மறுபரிசீலிக்க முடிவு
பாசித் அலியின் பேச்சு அவருக்கே வினையாக முடிந்திருக்கிறது. கராச்சி பிராந்திய அணி பயிற்சியாளராக அவரை நியமிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருந்தது. அந்த முடிவை தற்போது மறுபரிசீலனை செய்யவும் கிரிக்கெட் வாரியத்தின் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications