Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீங்க ஆட முடியாதுன்னு சொன்னா நாங்க என்ன பண்ணுவோம் தெரியுமா? -பாக். கிரிக்கெட் போர்டு

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு, பிசிசிஐ-க்கு எதிரான வாதங்களை தயாரித்து வருவதாக கூறியுள்ளது.

புல்வாமா தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் பலியானதை அடுத்து இனி இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுடன் கிரிக்கெட் ஆடக் கூடாது என சமூக வலைதளங்களில் ரசிகர்களால் கூறப்பட்டு வருகிறது.

வாய்ப்பே இல்லை

வாய்ப்பே இல்லை

இதனால், இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் இனி பல மாதங்களுக்கு நடைபெற வாய்ப்பே இல்லை. குறிப்பாக 2019 உலகக்கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆடாது என கூறப்பட்டு வருகிறது.

துண்டிக்க வேண்டும்

துண்டிக்க வேண்டும்

பிசிசிஐ இது குறித்து நேரடியாக அறிவிக்கவில்லை என்றாலும் அதை நோக்கியே சென்று கொண்டு இருக்கிறது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் பெயரைக் குறிப்பிடமால் ஐசிசி-க்கு கடிதம் எழுதியுள்ள பிசிசிஐ, ஐசிசி உறுப்பு நாடுகள் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாட்டுடன் உள்ள கிரிக்கெட் தொடர்பை துண்டித்துக் கொள்ள வேண்டும் எனக் கோரியுள்ளது.

ஐசிசி கூட்டம்

ஐசிசி கூட்டம்

இந்நிலையில், வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஐசிசி உறுப்பினர்கள் கூட்டம் துபாயில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் உலகக்கோப்பை போட்டி குறித்த பேச்சு எழாது என கூறப்பட்டு வருகிறது.

பதில் கேள்வி

பதில் கேள்வி

ஒருவேளை இந்த கூட்டத்திலோ அல்லது உலகக்கோப்பைக்கு முன்னரோ இந்தியா, பாகிஸ்தானுடன் விளையாடாது என பிசிசிஐ அறிவித்தால், அதற்கு பதில் கேள்வி கேட்க பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தயாராகி வருகிறது.

அப்ப என்ன செய்வீங்க?

அப்ப என்ன செய்வீங்க?

இது குறித்து வரும் செய்தி இது தான். "இந்தியா, பாகிஸ்தானுடன் ஆடாது (லீக் போட்டியில்) என கூறினால் அதற்கு பாகிஸ்தான் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், இரு அணிகளும் நாக்-அவுட் போட்டிகளில் சந்தித்தால் என்ன நடக்கும் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு கேள்வி கேட்கும்"

பதில் கிடைக்குமா?

பதில் கிடைக்குமா?

இதே கேள்வியை இந்தியாவிலும் பல முன்னாள் வீரர்கள் எழுப்பியுள்ளனர். இதற்கு இன்னும் பதில் இல்லை. இந்த விஷயத்தில் பிசிசிஐ, மத்திய அரசின் முடிவுக்காக காத்திருக்கிறது. உலகக்கோப்பை தொடர் தொடங்கும் வரையில் இதற்கு பதில் கிடைக்காது என்றே தெரிகிறது.

Story first published: Wednesday, February 27, 2019, 11:02 [IST]
Other articles published on Feb 27, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+