Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவர் எந்த பொண்ணோட தொடர்பு வச்சுகிட்டா எங்களுக்கு என்ன…? எஸ்ஸான பாக். கிரிக்கெட் வாரியம்

இஸ்லாமாபாத்: பல பெண்களுடன் இளம்வீரர் இமாம் தொடர்பு வைத்திருப்பது, அது அவரது தனிப்பட்ட விவகாரம், எங்களுக்கு சம்பந்தம் கிடையாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நைசாக நழுவி இருக்கிறது.

உலக கோப்பை தொடரில் லீக் சுற்றில் 11 புள்ளிகளை பெற்றும், நெட் ரன்ரேட் அடிப்படையில், பாகிஸ்தான் வெளியேற நியூசிலாந்து அரையிறுதிக்கு சென்றது. வங்க தேசத்துக்கு எதிரான கடைசி லீக் போட்டியில், பாகிஸ்தான் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் சதமடித்தார்.

சதம் அடித்ததன் காரணமாக, அந்நாட்டு ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார் இளம் வீரரான இமாம் உல் ஹக். ஆனால், தற்போது, பெண் விவகாரத்தில் சிக்கி ஏக கண்டனங்களுக்கு ஆளாகி இருக்கிறார்.

கசிந்த சாட்டிங் விவகாரம்

கசிந்த சாட்டிங் விவகாரம்

பல பெண்களுடன் இமாம் உல் ஹக் வாட்ஸ் அப்பில் சாட் செய்த விவரங்கள், சமூக வலை தளங்களில் வெளியாகி, கிரிக்கெட் உலகின் லேட்டஸ்ட் வைரலாக உள்ளது. அதனால், ரசிகர்களின் ஒட்டு மொத்த கேலிக்கும் இமாம் ஆளாகியுள்ளார். இவர், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்கின் உறவினராவார்.

பாக். விளக்கம்

பாக். விளக்கம்

தற்போது சர்ச்சையாகி உள்ள இமாம் உல் ஹக்கின் இந்த விஷயம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்துள்ளது. வீரர்களின் தனிப்பட்ட விவகாரங்களில் அக்கறை செலுத்துவது கிடையாது என்று கூறியிருக்கிறது.

தனிப்பட்ட விவகாரம்

தனிப்பட்ட விவகாரம்

இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறி இருப்பதாவது: இமாம் உல் ஹக் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு அவரது தனிப்பட்ட விஷயம். அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நாங்கள் தலையிடுவது தவறு.

கருத்து கூறமுடியாது

கருத்து கூறமுடியாது

எங்களை பொறுத்த வரை, அவரை ஒரு வீரராக மட்டுமே நாங்கள் பார்க்கிறோம். அவர் அணியில் ஏதேனும் ஒழுங்கீனமாக நடந்தால் மட்டுமே எங்களால் தட்டி கேட்க முடியும். அவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் புகுந்து கருத்து கூற முடியாது என்று அலட்சியமாக பதிலளித்துள்ளது.

Story first published: Friday, July 26, 2019, 9:37 [IST]
Other articles published on Jul 26, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+