Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அசைவம் கூடாது.. பிரியாணிக்கு நோ.. வீரர்களுக்கு புது ரூல்ஸ்.. பாக். கிரிக்கெட் வாரியம் ஷாக்.. ஏன்?

Recommended Video

Pakistan Cricket Board releases a new diet plan for players

இஸ்லாமாபாத்: தங்கள் நாட்டு கிரிக்கெட் வீரர்கள் இனிமேல் சிக்கன், மட்டன் பிரியாணி சாப்பிட கூடாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் அணிக்கு இது மிக மோசமான காலகட்டம் என்றுதான் கூற வேண்டும். வரிசையாக களமிறங்கும் போட்டிகளில் எல்லாம் பாகிஸ்தான் அணி மோசமாக தோல்வியை சந்தித்து வருகிறது.

உலகப் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் மிக மோசமாக தோல்வியை தழுவியது. உலகக் கோப்பை தொடரில் மிக மோசமாக தோல்வி அடைந்து அரையிறுதிக்கு கூட செல்லாமல் பாகிஸ்தான் வெளியேறியது.

என்ன சிக்கல்

என்ன சிக்கல்

இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இருக்கும் சில முக்கிய வீரர்கள் அந்நாட்டு கிரிக்கெட் பயிற்சியாளருக்கு எதிராக புகார் அளித்தனர். பாகிஸ்தான் கிரிக்கெட் கோச் மைக்கி ஆர்த்தரை உடனே நீக்க வேண்டும் சிலர் அணி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.

புதிய கோச்

புதிய கோச்

இதையடுத்து பாகிஸ்தான் தலைமை கோச் பதவியில் இருந்து மைக்கி ஆர்த்தர் நீக்கப்பட்டார். அதற்கு பதிலாக தற்போது பாகிஸ்தானின் லெஜெண்ட் வீரர் மிஸ்பா உல் ஹக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மிஸ்பா உல் ஹக் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பின் அணிக்குள் அதிரடியாக நிறைய மாற்றங்கள் நடந்து வருகிறது.

என்ன சொல்கிறார்

என்ன சொல்கிறார்

இந்த நிலையில், பாகிஸ்தான் வீரர்கள் இனிமேல் பிரியாணி சாப்பிட கூடாது. அதேபோல் எண்ணெய் அதிகமாக இருக்கும் பொருட்களை சாப்பிட கூடாது. அதிக இனிப்பு உள்ள கலோரி உள்ள பொருட்களை சாப்பிட கூடாது என்று மிஸ்பா உல் ஹக் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சிறப்பு பாஸ்

சிறப்பு பாஸ்

ஒரு பயிற்சியாளாராக நான் என் அணியினை சிறப்பாக உருவாக்க வேண்டும். அணி வீரர்கள் நன்றாக இருந்தால் அணி எளிதாக வெல்லும். ஆனால் தற்போது பாகிஸ்தான் அணியிடம் அது குறைவாக இருக்கிறது. அணி வீரர்களிடம் இதனால் சில கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். அதை தற்போது செய்ய தொடங்கி உள்ளேன் என்று மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.

மோசம்

மோசம்

பொதுவாக பாகிஸ்தான் வீரர்கள் அதிக கொழுப்பு உள்ள உணவுகளை உண்பதால் தற்போதெல்லாம் சரியாக உடல் வலிமையை கொண்டு இருப்பதில்லை. இந்திய வீரர்கள் சிக்ஸ் பேக்குடன் இருக்கும் நிலையில் பாகிஸ்தான் வீரர்கள் தொப்பையுடன் வலம் வருகிறார்கள். இதனால் தற்போது மிஸ்பா உல் ஹக் அதிரடி தடைகளை விதித்துள்ளார்.

Story first published: Tuesday, September 17, 2019, 14:08 [IST]
Other articles published on Sep 17, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+