இந்தியாவுடன் விளையாடினால் நிறைய பணம் கிடைக்கும்... பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பொறாமை!
இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் கிரிக்கெட் விளையாடினால் நிறைய சம்பாதிக்க முடியும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்து இருக்கிறது. மேலும் இதன் காரணமாகவே இந்தியாவுடன், நிறைய அணிகள் விளையாட ஆர்வம் தெரிவிப்பதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்து இருக்கிறது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜாம் சேதி இந்த தகவலை தெரிவித்து இருக்கிறார். இந்தியாவில் இருக்கும் தொலைக்காட்சி நிறுவனங்கள் குறித்தும் இவர் தெரிவித்து இருக்கிறார்.
இந்திய அணி மிகவும் சிறந்த அணியாக இருப்பதன் காரணத்தாலேயே இவ்வளவு பணம் சம்பாதிக்க முடிகிறது. இது பெரிய வியாபாரமாகி மாறியுள்ளது என்றும் அவர் கூறியுள்ள்ளார்.

அதிகரிக்கும் போட்டிகள்
இந்திய கிரிக்கெட் அணிக்கு இந்த ஒரு வருடம் தொடர்ச்சியாக நிறைய கிரிக்கெட் போட்டிகள் நடந்தது. மற்ற நாட்டு வீரர்களை விட இந்திய கிரிக்கெட் வீரர்களே அதிக போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடினார்கள். இதனால் இந்திய வீரர்களே சமயத்தில் பொறுமையிழந்து பிசிசிஐ அமைப்பிடம் புகார் அளிக்கும் அளவிற்கு சென்றது.

என்ன காரணம்
தற்போது இதற்கு என்ன காரணம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நஜாம் சேதி தெரிவித்து இருக்கிறார். அதன்படி இந்தியாவில் கிரிக்கெட் விளையாடும் போது ஐசிசி அமைப்பிற்கு நிறைய பணம் கிடைக்கிறது. எந்த நாடு விளையாட வருகிறதோ அந்த நாட்டின் கிரிக்கெட் அணிக்கும் நிறைய பணம் விளம்பரம் மூலம் கிடைக்கிறது. இதன் காரணமாகவே தொடர் போட்டிகள் நடக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

ஐசிசி கட்டுப்பாடு
ஐசிசி அமைப்பும் இதில் முக்கிய பங்கு வகிப்பதாக அவர் கூறியுள்ளார். அதன்படி பிசிசிஐ அமைப்பு எப்போதும் ஐசிசியின் செல்லப்பிள்ளையாக இருக்கிறது என்றுள்ளார். அதேபோல் ஐசிசியில் இருக்கும் பல முக்கிய நபர்கள் முன்பு பிசிசிஐ அமைப்பில் இருந்தவர்கள் என்றும் கூறியுள்ளார். எவ்வளவு போட்டிகள் நடத்த முடியுமோ அவ்வளவு போட்டிகள் நடத்தி ஐஐசி அமைப்பிற்கு பிசிசிஐ சம்பாதித்து கொடுக்கிறது என்று கூறியுள்ளார்.

இந்தியாவிற்கு எதிரான போட்டி
கடைசியாக ஜனவரி 2013ம் தேதி இந்தியாவும் பாகிஸ்தானும் நேருக்கு நேர் விளையாடியது. இரண்டு நாடுகளும் தனியாக விளையாடிய 'பை-லேட்ரல்' போட்டி அதுமட்டுமே ஆகும். ஆனால் அதன்பின் இரு நாடுகளும் விளையாடவே இல்லை. இது குறித்து பேசிய அவர் ''இதற்காக கடும் முயற்சிகள் எடுத்து வருகிறோம். இந்தியா தனது ஒப்பந்தத்தை மீறிவிட்டது. இதனால் எங்களுக்கு பெரிய நஷ்டம். இதில் அரசியல் இருக்கிறது. இருநாடுகளும் மோதும் கிரிக்கெட் போட்டி விரைவில் நடக்கும்'' என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications