Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பூகம்பமாக வெடித்த ஜெய்ஷா பேச்சு.. கடும் எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்.. அறிக்கை முழு விவரம்

லாகூர் : அடுத்த ஆண்டு நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் இருந்து வேறு நாட்டுக்கு மாற்றப்படும் என்று ஜெய்ஷா கூறியது பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனால் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை உள்ளிட்ட எவ்வித போட்டியிலும் பாகிஸ்தான் பங்கேற்காது என்ற தகவல் வெளியானது.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் மௌனத்தை கலைத்துள்ளது.
பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது காணலாம்.

பாதகமான பேச்சு

பாதகமான பேச்சு

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய்ஷாவின் பேச்சு தங்களுக்கு ஆச்சரியத்தையும், ஏமாற்றத்தையும் தந்திருக்கிறது. ஆசியக் கோப்பையை பாகிஸ்தானில் இருந்து வேறு நாட்டுக்கு மாற்றுவோம் என்ற ஜெய்ஷாவின் கருத்து எங்களிடம் ஆலோசிக்கப்படவில்லை. இது போன்ற அறிவிப்பு எந்த அளவுக்கு பாதகம் ஏற்படுத்தும் என்பது குறித்தும் ஜெய்ஷா யோசிக்காமல் பேசி இருக்கிறார்.

எதிரான பேச்சு

எதிரான பேச்சு

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஆலோசனை கூட்டத்தில் அனைத்து நாடு உறுப்பினர்களும் ஆலோசிக்கப்பட்ட பிறகு தான் ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. இதற்கு அனைத்து நாட்டு உறுப்பினர்களும், ஆதரவு கொடுத்தனர். ஆனால் இதற்கு மாற்றாக ஜெய்ஷாவின் பேச்சு அமைந்துள்ளது. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் 1983 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட உறுதிமொழிக்கும் செயல்பாட்டுக்கும் எதிரான நடவடிக்கையாக ஜெய்ஷாவின் பேச்சு அமைந்துள்ளது.

பாகிஸ்தான் புறக்கணிக்கும்

பாகிஸ்தான் புறக்கணிக்கும்

ஆசிய கிரிக்கெட் நாடுகளின் உறுப்பினர்களின் நலனுக்காகவும் கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்காகவும் தான் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. ஆனால் இது போன்ற அறிவிப்பு ஆசிய கிரிக்கெட்டையும் சர்வதேச கிரிக்கெட்டையும் பிளவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. ஜெய்ஷாவின் இந்த பேச்சு இனி வரும் காலங்களில் இந்தியாவில் நடைபெறும் அனைத்து ஐசிசி தொடர்களில் இருந்தும் பாகிஸ்தான் பங்கேற்பதை பாதிக்கும்.

அவசர கூட்டம்

அவசர கூட்டம்

ஆசிய கிரிக்கெட் தலைவரின் பேச்சு குறித்து தற்போது வரை பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத்திற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விளக்கமும் தரப்படவில்லை. தற்போது ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அவசர கூட்டத்தை தற்போது கூட்ட வேண்டும். இந்த விவகாரம் குறித்து தற்போது பேசி முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

Story first published: Wednesday, October 19, 2022, 21:51 [IST]
Other articles published on Oct 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+