இந்தியா பத்தி கவலைப்பட வேண்டாம் -பாகிஸ்தான் பாதுகாப்பு பத்தி கவனமா இருங்க -பிசிசிஐ

டெல்லி : இந்தியா குறித்து கவலை கொள்வதை விட்டுவிட்டு பாகிஸ்தானின் பாதுகாப்பு குறித்து அந்நாட்டின் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அக்கறை செலுத்த வேண்டும் என்று பிசிசிஐ துணை தலைவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் நடைபெற்ற இலங்கையுடனான தொடரில் பாகிஸ்தான் அணி வெற்றி கொண்டுள்ளது. இதையடுத்து பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் இஷான் மணி, பாகிஸ்தானுடன் ஒப்பிடும்போது இந்தியா மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலில் உள்ளதாக தெரிவித்திருந்தார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் இஷான் மணியின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள பிசிசிஐ துணை தலைவர் மஹிம் வர்மா, தன்னுடைய சொந்த நாட்டின் பாதுகாப்பு குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கவலை கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

பத்தாண்டுகள் தனிமைப்பட்ட பாகிஸ்தான்

பத்தாண்டுகள் தனிமைப்பட்ட பாகிஸ்தான்

பாகிஸ்தானில் கடந்த 2009ல் இலங்கை வீரர்கள் மீதான தீவிரவாதிகள் தாக்குதலில் பொதுமக்கள் 8 பேர் கொல்லப்பட்டனர். 7 வீரர்கள் காயமடைந்தனர். இதையடுத்து கடந்த பத்தாண்டுகளாக அந்த நாட்டில் கிரிக்கெட் விளையாட எந்த சர்வதேச அணியும் முன்வரவில்லை.

தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்

தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்

பத்தாண்டுகள் கடந்த நிலையில் இந்த ஆண்டின் துவக்கத்தில் குறைந்த ஓவர்கள் தொடரிலும் தற்போது டெஸ்ட் தொடரிலும் இலங்கை அணிவிளையாடியது. சமீபத்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

பிசிபி தலைவர் பெருமிதம்

பிசிபி தலைவர் பெருமிதம்

சர்வதேச அளவில் பாகிஸ்தான் பாதுகாப்பான நாடு என்பது தற்போது நடத்தப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்மூலம் நிரூபணமாகியுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் இஷான் மணி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

 இஷான் மணி எச்சரிக்கை

இஷான் மணி எச்சரிக்கை

இலங்கைக்கு எதிரான தொடரின் வெற்றிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இஷான் மணி, பாகிஸ்தானை காட்டிலும் இந்தியாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகமாக உள்ளதாக தெரிவித்திருந்தார்.

"சொந்த நாட்டு பிரச்சினையை பார்க்கட்டும்"

இந்தியா குறித்த பிசிபி தலைவர் கருத்துக்கு பிசிசிஐயின் துணை தலைவர் மஹிம் வர்மா பதிலடி கொடுத்துள்ளார். முதலில் இஷான் மணி தன்னுடைய சொந்த நாட்டின் பாதுகாப்பு குறித்து கவலை கொள்ளட்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவை பாதுகாக்க திறமை உள்ளது

இந்தியாவை பாதுகாக்க திறமை உள்ளது

இந்தியாவின் பாதுகாப்பை திறம்பட நிர்வாகிக்கும் திறமை இங்கு அதிகமாகவே உள்ளது என்று பிசிசிஐ துணை தலைவர் மஹிம் வர்மா கூறியுள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
PCB should worry about their own country - BCCI Vice-President
Story first published: Tuesday, December 24, 2019, 18:24 [IST]
Other articles published on Dec 24, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X