For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்ன பவுலிங் போட்றீங்க? கடுப்பாகி போட்டியை பார்க்காமல் சென்ற பாகிஸ்தான் அணி நிர்வாகி மிக்கி ஆர்த்தர்

சென்னை : ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர்கள் பந்து வீச்சிலும் சொதப்பியதால் அந்த அணியின் இயக்குனர் மிக்கி ஆர்த்தர் போட்டியை பார்க்காமலே கடுப்பாகி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆசிய கோப்பை போட்டிகள் நடைபெற்ற சமயத்தில் ஐசிசி தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணி நம்பர் ஒன் இடத்தை இருந்தது. உலகில் தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளர்களை நாங்கள் வைத்திருக்கிறோம்.

Pakistan cricket director Micky arthur angry on their players performance

ஆசிய கோப்பையும் உலக கோப்பையும் நாங்கள் தான் வெல்வோம் என பாகிஸ்தான் அணி ரசிகர்கள் நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் அவர்களுக்கு ஆசிய கோப்பை போட்டியில் சரியான அடி கிடைத்தது. அதன் பிறகு உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான அணி சாதிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் விளையாடிய நான்கு போட்டிகளில் இரண்டு வெற்றி இரண்டு தோல்வி என்ற நிலையில் ஆப்கானிஸ்தானை இன்று எதிர்கொண்டார்கள்.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 282 ரன்கள் எடுத்தது.ஆடுகளம் தோய்வாக இருக்கிறது.இதனால் ஆப்கானிஸ்தானை 150 ரன்களுக்குள் செலுத்தி விடலாம் என பாகிஸ்தான் பிளான் போட்டது. ஆனால் பாகிஸ்தானின் பிளானுக்கு ஆப்பு வைக்கும் வகையில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் சிறப்பாக விளையாடினர்.

மேலும் பாகிஸ்தான் வீரர்கள் பந்து வீச்சில் கடுமையாக சொதப்பினர். மேலும் வழக்கம் போல் பில்டிங்களும் பாகிஸ்தான் வீரர்கள் தடுமாறினர். இதனால் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இயக்குனர் மிக்கி ஆத்தர் கடுப்பாகி போட்டியை பார்க்காமல் பாதியிலே வெளியேறினார்.

இது பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது.பாகிஸ்தான் அடைந்த இந்த தோல்விக்கு ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். பலம் வாய்ந்த பாகிஸ்தானை முதல் முறையாக உலக கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தி இருப்பதற்கு உலக ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து கொள்கிறார்கள்.

Story first published: Monday, October 23, 2023, 22:27 [IST]
Other articles published on Oct 23, 2023
English summary
Pakistan cricket director Micky arthur angry on their players performance என்ன பவுலிங் போட்றீங்க? கடுப்பாகி போட்டியை பார்க்காமல் சென்ற பாகிஸ்தான் அணி நிர்வாகி மிக்கி ஆர்த்தர்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+