Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்க மட்டுமல்ல...! பாகிஸ்தானிலும் நம்ம தல தோனி தான் கிங்...! வைரலாகும் 7ம் நம்பர் ஜெர்சி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒரு நெகிழ்ச்சியான புகைப்படம் அனைவரிடமும் பாராட்டை பெற்றிருக்கிறது.

உலக கோப்பை தொடரில் பங்கேற்க இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. 10 அணிகள் மோதும் இந்த தொடரில் 45 லீக், 3 நாக் அவுட் உட்பட மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளது. லீக் ஆட்டங்களில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

Pakistan cricket fan puts dhoni’s name on pakistan team world cup 2019 jersey

இந்திய அணி கேப்டன் விராட் கோலி தலைமையில் இங்கிலாந்து சென்று இருக்கிறது. அந்த அணியில் தல தோனி இருக்கிறார். தல தோனியை பத்தி யாரும் சொல்ல வேண்டாம். உலக கோப்பை வெற்றியில் அவரது பங்களிப்பு ரொம்ப முக்கியம்.

இந்திய அணியில் அவரின் சாதனை, இந்திய அணிக்கான சாதனை என்று சொல்லிக் கொண்டே போகலாம். பேட்டிங், கேப்டன்சி, அணியில் வீரர்களை அரவணைத்து செல்வது என அவரின் திறமையை கிரிக்கெட் உலகம் அறிந்த ஒன்று.

தோனிக்கு இந்தியாவில் மட்டுமல்ல... உலகின் பல நாடுகளிலும் ரசிகர்கள் இருக்கின்றனர். சொந்த அணிகளை விட, தல தோனியை நேசிக்கும் ரசிகர்களும் உள்ளனர். அந்த வகையில், தோனியை பெருமைப்படுத்தும் வகையில், பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் விநோதமான பதிவை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஷேசாத் உல் ஹசான் என்ற அந்த ரசிகர் 7ம் நம்பருடன் தோனியின் பெயரை பாகிஸ்தான் ஜெர்சியில் பதிவு செய்துள்ளார். அவரின் இந்த பதிவிற்கு பாகிஸ்தான், இந்தியாவில் உள்ள ரசிகர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Story first published: Sunday, May 26, 2019, 18:00 [IST]
Other articles published on May 26, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+