Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய கோப்பையில் இந்தியா ஃபிக்சிங் செய்தது.. வெட்ககேடு ! பொங்கி எழுந்த பாகிஸ்தான் வீரர் சோயிப் அக்தர்

மும்பை : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக சமூக வலைத்தளத்தில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சூப்பர் போர் லீக் சுற்ற ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக இந்திய அணி 213 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் டாப் வரிசை வீரர்கள் சொற்பரன்களில் ஆட்டம் இழந்தனர்.

Pakistan cricket Legend Shoaib akhtar slans fans for fake allegation on india

இலங்கையிடம் இந்திய அணி தோற்றால் பாகிஸ்தான அணி வெளியேறிவிடும் என்பதற்காக இப்படி நடைபெற்றதாக பாகிஸ்தானில் சில அறிவு ஜீவிகள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தனர்.
இது குறித்து பேசிய பாகிஸ்தான் வீரர் சோயிப் அக்தர், ரசிகர்களே நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை. இந்தியா மேட்ச் பிக்சிங் செய்ததாக எனக்கு பல மீம்ஸ்களையும் செய்திகளையும் அனுப்புகிறீர்கள்.

பாகிஸ்தானை வெளியேற்றுவதற்காக அவர்கள் வேண்டுமென்றே தோற்க முயற்சித்தார்கள் என்று கூறுகிறீர்கள். நீங்கள் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறீர்களா? இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி கடுமையாக போராடி வெற்றியைப் பெற்றார்கள். அந்தப் போட்டியில் வெல்லாலகே மற்றும் அசலங்கா சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.

நீங்கள் அந்த 20 வயது சிறுவனை பார்த்தீர்களா? அவர் 43 ரன்கள் பேட்டி எடுத்து ஐந்து விக்கெட்டுகளை பந்துவீச்சில் கைப்பற்றினார். இப்படி இருக்கும் போது பல ரசிகர்களும் எனக்கு போன் செய்து இந்தியா வேண்டுமென்றே தோற்கிறது என்று கூறுகிறீர்கள். முதலில் அவர்கள் ஏன் தோற்க வேண்டும். நம்மை போல் அவர்களும் இறுதிப் போட்டிக்கு செல்ல வேண்டும் என ஆசைப்படுவார்கள் தானே.

நீங்கள் எல்லாம் காரணமே இல்லாமல் ஒரு அணியை விமர்சிக்கும் வகையில் மீம்ஸ் போடுகிறீர்கள். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இந்திய அணி சிறப்பாக அன்றைய ஆட்டத்தில் விளையாடி வெற்றி பெற்றது. குல்தீப் யாதவ் செயல்பட்ட விதத்தை எல்லாம் பார்த்தாலே ஆச்சரியமாக இருந்தது. பும்ராவை பாருங்கள் இந்திய அணி வீரர்கள் எப்படி அந்த எளிய இலக்கை தற்காத்துக் கொண்டார்கள் என்று பாருங்கள்.

இலங்கை வீரர் வெல்லாலகேவை பாருங்கள்.அவர் எப்படி செயல்படுகிறார்கள் என்று பாருங்கள். ஆனால் பாகிஸ்தான் வீரர்கள் இப்படி எந்த ஒரு செயல்பாட்டையும் களத்தில் காண்பிக்கவில்லை. நமது வேகப்பந்து வீச்சாளர்கள் சரியாக பந்து வீசவில்லை. எந்த வேகப்பந்துவீச்சாளர் நமது அணியில் தொடர்ந்து 20 30 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்கள்.

அப்படி இருக்கும் போது நம்மால் எப்படி 10 ஓவர்கள் வீசி காயம் அடையாமல் இருக்க முடியும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும். இந்தியாவைப் போல் நாமும் களத்தில் எதிரணியோடு சண்டை செய்ய வேண்டும். உங்களுடைய செயல்பாடு வெட்கக்கேடானது என்று சோயிப் அக்தர் கூறியுள்ளார்.

Story first published: Thursday, September 21, 2023, 22:32 [IST]
Other articles published on Sep 21, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+