Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்படியே செய்தால் வேலைக்கே ஆகாது.. பாகிஸ்தான் சரிவை தடுத்து நிறுத்துங்கள் - ஷாகித் அப்ரிடி கருத்து

கராச்சி : ஆசிய கிரிக்கெட் உலகில் ஒரு காலத்தில் பவர் ஹவுஸ் ஆக விளங்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது பரிதாபமான சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. ஆசிய கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை, டி20 உலக கோப்பை என தொடர்ந்து மூன்று தொடர்களில் பாகிஸ்தான் அணி முதல் சுற்றிலேயே வெளியேறி இருக்கிறது.

இதேபோன்று டெஸ்ட் போட்டிகளிலும் அண்மையில் குறிப்பிடத் தகுந்த வெற்றியை அந்த அணி பெறவில்லை. இந்த நிலையில் பாகிஸ்தான் அணி சரிவை நோக்கி வருவதற்கு என்ன காரணம் என்பதை ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

cricket Pakistan cricket team

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை தொடர்ந்து மாற்றிக் கொண்டே வருகிறார்கள். இப்படி ஒட்டுமொத்த சிஸ்டத்தையும் மாற்றிக் கொண்டே வந்தால் எவ்வாறு அது சரியான முறையில் இயங்கும். ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒவ்வொரு தலைவர் கிரிக்கெட் வாரியத்திற்கு பதவி ஏற்கிறார்.

புது மாதிரியான சிஸ்டம் ஒவ்வொரு ஆண்டும் அறிமுகப்படுத்துகிறது. இப்படி செய்து கொண்டிருந்தால் எதுவும் வேலைக்கு ஆகாது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீண்டும் உயிர் பெற வேண்டும் என்றால் அனைத்து சீனியர் உறுப்பினர்களும் சீனியர் வீரர்களும் ஒன்றாக அமர்ந்து ஒரு திட்டத்தை உருவாக்குங்கள்.

மூன்று ஆண்டுக்கு ஒரு திட்டத்தை பாலோ செய்யுங்கள்.அப்படி செய்தால் நிச்சயம் நல்ல முடிவுகள் கிடைக்கும். இதை விட்டுவிட்டு ஆண்டுதோறும் நீங்கள் சிஸ்டத்தை மாற்றிக் கொண்டிருந்தால் எவ்வாறு உங்களுக்கான முடிவுகள் கிடைக்கும் என்று ஷாகித் அப்ரிடி கூறியுள்ளார். 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி முதல் சுற்றில் வெளியேறிய நிலையில் பாபர் அசாம், தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.

இதனை அடுத்து டி20 அணியின் கேப்டனாக ஷாகித் அப்ரிடி நியமிக்கப்பட்டார். ஒரு தொடரில் தான் ஷாகித் கேப்டன் ஆக இருந்தார். அதன் பிறகு திரும்பும் பாபர் அசாம் கேப்டன் பதவிக்கு நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் சரியாக விளையாடாத காரணத்தால் பாபர் அசாம் மீண்டும் ராஜினாமா செய்ய வேண்டுமென பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பேச்சு எழுந்துள்ளது. இந்த சூழலில் தான் அப்ரிடி இந்த கருத்தை தெரிவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, July 25, 2024, 18:00 [IST]
Other articles published on Jul 25, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+