இங்கிலாந்தில் பாகிஸ்தான் அணி... கொரோனா பரிசோதனை நெகட்டிவ்...ஆயத்தமாகும் வீரர்கள்
லண்டன் : இங்கிலாந்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். வரும் ஆகஸ்ட்டில் 3 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் இவர்கள் விளையாட உள்ளனர்.
Recommended Video
இதையொட்டி பாகிஸ்தானின் 20 வீரர்கள் மற்றும் 11 ஊழியர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டனர். இவர்களுக்கு இங்கிலாந்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அனைவருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து இவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தொடர்ந்து தங்களது பயிற்சிகளை துவங்கவுள்ளனர்.

8ம் தேதி துவக்கம்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் முடங்கியுள்ள சர்வதேச கிரிக்கெட், தற்போது, இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் வரும் 8ம் தேதி துவங்கவுள்ளது. இதையொட்டி பயோ செக்யூர் முறையில் இரு அணிகளும் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இரு அணிகளுக்கும் இடையில் 3 டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளன.

ஆகஸ்ட், செப்டம்பரில் நடைபெறுகிறது
இந்நிலையில் இந்த தொடரை தொடர்ந்து ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் 3 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டித் தொடர்கள் நடைபெறவுள்ளன. இதற்கான தேதிகள் அறிவிக்கப்படாத நிலையில், இந்த தொடருக்காக பாகிஸ்தான் அணியின் 20 வீரர்கள் மற்றும் 11 ஊழியர்கள் கொண்ட குழு கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்து சென்றடைந்துள்ளது.

பாகிஸ்தான் அணி இங்கிலாந்து பயணம்
முன்னதாக இந்த தொடரையொட்டி பாகிஸ்தானில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 10 பாகிஸ்தானிய கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் என ரிசல்ட் வந்தது. இதையடுத்து, 20 வீரர்கள் மற்றும் 11 ஊழியர்கள் மட்டுமே இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டனர். தொடர்ந்து 10 வீரர்களுக்கு மீண்டும் இருமுறை பரிசோதனைகளை பிசிபி எடுத்தது. இதில் 6 வீரர்களுக்கு நெகட்டிவ் என உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அவர்களும் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

கொரோனா பரிசோதனை
இதனிடையே, இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணியினருக்கு அங்கு கொரோனா பரிசோதனைகள் எடுக்கப்பட்டதில் அனைவருக்கும் நெகட்டிவ் என முடிவுகள் வந்துள்ளது. இதை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது. இதையடுத்து அவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications