Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அழகாக இருப்பது தான் பிரச்சனையாக மாறியது.. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அஹமத் ஷாசாத் குமுறல்

லாகூர்: தான் பார்ப்பதற்கு அழகாக இருப்பதால், நன்றாக உடை அணிந்து கொள்வதால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்கள் தனக்கு எதிராக செயல்பட்டதாக கூறி இருக்கிறார் அஹமத் ஷாசாத். அவர் சமீபத்தில் யூட்யூப் சேனல் ஒன்றில் இது குறித்து பேசி இருக்கிறார்.

இது போன்ற ஒரு விஷயத்தை இதுவரை எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் கூறியது இல்லை. இதை வைத்து சில ரசிகர்கள் அவரை கிண்டல் செய்தும் வருகின்றனர். சிலர் இது உண்மையாகவும் இருக்கலாம் என கூறி வருகின்றனர். அஹமத் ஷாசாத் தனது 17 வது வயதில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்திருந்தார்.

Pakistan cricketer Ahmed Shahzad claims being handsome caused him problems

பேட்ஸ்மேன் ஆன அவர் 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தனது சர்வதேச அறிமுகத்தை பெற்றார். 2009 டி20 உலகக் கோப்பை வென்ற பாகிஸ்தான் அணியிலும் அவர் இடம் பெற்று இருந்தார். 2017 சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்ற பாகிஸ்தான் அணியிலும் அவர் இடம் பெற்று இருந்தார்.

கடைசியாக 2019 ஆம் ஆண்டு அஹமத் ஷாசாத் பாகிஸ்தான் அணிக்காக விளையாடி இருந்தார். அதன் பின் 6 ஆண்டுகளாக அவருக்கு பாகிஸ்தான் அணியில் இடம் அளிக்கப்படவில்லை. அவரது 27 வது வயதில் இருந்து தற்போது 33 வயது வரை அவருக்கு பாகிஸ்தான் அணியில் இடம் அளிக்கப்படாமல் இருப்பது அவ்வப்போது விமர்சனத்தையும் ஏற்படுத்தி வந்தது.

இந்த நிலையில் தனக்கு வாய்ப்பு கிடைக்காதது பற்றி அந்த பேட்டியில் பேசிய அஹமத் ஷாசாத் சில அதிர்ச்சிகரமான விஷயங்களை கூறினார். பார்ப்பதற்கு தான் நன்றாக இருப்பது தனக்கு நிறைய பிரச்சனைகளை உருவாக்கியதாக கூறினார்.

"பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் பார்ப்பதற்கு நன்றாக இருந்து, நன்றாக உடை அணிந்து, நன்றாக பேசினால் சில வீரர்களுக்கு அது பிடிக்காது. பாகிஸ்தான் அணியில் இதற்காகவே என்னை சிலர் குறி வைத்தார்கள். நான் இதை எனக்காக மட்டும் சொல்லவில்லை. வேறு சிலரும் இதை எதிர்கொண்டு இருக்கிறார்கள். உங்களுக்கு என ரசிகர் கூட்டம் இருந்தால், மக்கள் உங்களை அங்கீகரித்தால் அதை சில மூத்த வீரர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது." என அஹமத் ஷாசாத் கூறி இருக்கிறார்.

மேலும், "நாங்கள் சிறிய இடங்களில் இருந்து வருகிறோம். நான் லாகூரின் அனார்கலியில் இருந்து வந்தேன். எனக்கு அங்கீகாரம் கிடைத்தது. என்னை நானே வளர்த்துக் கொண்டேன். என்னை நானே பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் வகையில் முன்னேற்றிக் கொண்டேன். அதுவே எனக்கு பாகிஸ்தானில் நிறைய பிரச்சனைகளையும் உருவாக்கி இருக்கிறது." என்றார் அஹமத் ஷாசாத்.

Story first published: Sunday, January 26, 2025, 15:35 [IST]
Other articles published on Jan 26, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+